உஷாாாார்… Amazon, Flipkart எல்லாவற்றிலும் ஆஃபர் மழை! ஆர்டர் செய்யும் போது கவனம்!!

First Published Sep 20, 2022, 12:14 PM IST

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கடைசி சில மாதங்களில் பண்டிகை சீசன் கொண்டாட்டமாக இருக்கும். இதனால் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா என பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங தளங்களில் குறைந்த விலையில் சிறப்பு சலுகை விற்பனை நடைபெறும். 

அந்தவகையில், நடப்பு ஆண்டில் தற்போது அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல், பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ், ஷாவ்மி இணையதளத்தில் தீபாவளி விற்பனை என ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு பெயரில் ஆஃபர் விற்பனையைத் தொடங்கியுள்ளது. க்ரோமா, ரிலையன்ஸ் ஆகியவற்றில் ஏற்கெனவே ஆஃபர் விற்பனை நடந்து வருகிறது. அமேசான், பிளிப்கார்ட்டில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. 
 

இந்த சூழலில் தான் பெரும்பாலான மோசடிகளும், போலியான தயாரிப்பு விற்பனைகளும் நடைபெறுகின்றன. இதற்கு முக்கிய காரணமே போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்வதற்கு முன்பு, முடிந்த வரையில் அந்த பொருளை விற்கும் விற்பனையாளர் ‘செல்லர்’ விவரங்களையும், அவர்களின் நிபந்தனையும் பார்க்க வேண்டும். 
 

இன்னும் சிலர் அமேசான் மட்டும் தான் பொருட்களை வாங்கி விற்று வருவதாக நினைக்கிறார்கள். உண்மையில், இரண்டு விதமாக விற்பனை நடைபெறுகின்றன. ஒன்று அமேசான் ஃபுல்பில்மெண்ட், இரண்டாவது செல்லர் ஃபுல்பில்மெண்ட் என்று அழைக்கப்படும். 

அதாவது, நாம் ஆர்டர் செய்யும் பொருளை அமேசான் தரப்பில் பரிசோதித்து, அமேசான் நிறுவனமே விலையை நிர்ணயம் செய்வது என்பது ‘அமேசான் ஃபுல்பில்மெண்ட்’ ஆகும். விற்பனையாளர் தரப்பில் இருந்து விலை நிர்ணயம் செய்து, தரம்பார்த்து டெலிவரி செய்யப்படும் முறைக்கு ‘செல்லர் ஃபுல்பில்மெண்ட்’ ஆகும். இதேபோல் தான் பிளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இருக்கும்.

Flipkart பிக் பில்லியன் டே மூலம் Poco M5 விற்பனை ஆரம்பம்!

எனவே,  ஒரு பொருளை ஆர்டர் செய்யும் முன்பு, அதன் செல்லர் விவரங்களையும், டெலிவரி கட்டணம், வாரண்டி உள்ளிட்ட விவரங்களை கவனமாக பார்க்க வேண்டும். சில விற்பனையாளர்கள் மிக தந்திரமாக 300 ரூபாய் மதிப்பிலான பொருளின் விலை 100 ரூபாய் என்று அறிவித்துவிட்டு, டெலிவரி கட்டணம் 200 ரூபாய் என்று போட்டு விடுவார்கள். எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு கவனமாக பொருளை ஆர்டர் செய்ய வேண்டும்.

Flipkart வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு..! இப்படி செய்யவாங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!

மேலும், ஆர்டர் செய்யும் பொருளானது புதிய தயாரிப்பு தானா, அல்லது பழைய பொருளை புதுப்பித்து விற்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். அத்துடன் முடிந்தவரையில் ஒரு பொருளை மற்ற ஷாப்பிங் தளங்களில் எவ்வளவு ரூபாய்க்கு விற்கிறார்கள் என்பதையும் குறுக்கு சோதனை செய்துகொள்ள வேண்டும்.  வங்கி கார்டுகளுக்கான ஆஃபர்கள் இருப்பின் அதையும் பயன்படுத்தி ஆர்டர் செய்தால், அதிகபட்ச தள்ளுபடியைப் பெறலாம்.

click me!