Xiaomi தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்! முழு விவரங்கள்!!

Published : Sep 19, 2022, 03:32 PM IST

ஷாவ்மி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளை செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் என்னென்ன தயாரிப்புகளுக்கு எவ்வளவு ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.  

PREV
15
Xiaomi தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்! முழு விவரங்கள்!!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் ஷாவ்மி நிறுவனம் திகழ்கிறது. குறைந்த விலையில் அதிகப்படியான அம்சங்கள் இருப்பதால் ஷாவ்மியின் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. தற்போது ஷாவ்மி நிறுவனம் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. 
 

25

அதன்படி, ரெட்மி 10 பிரைம், ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, கோட்டாக் ஆகிய வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

35

இந்த தள்ளுபடி விற்பனையில் ரெட்மி ண9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனானது வெறும் 7,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் அசல் விலை 12,999 ரூபாய் ஆகும். இதே போல், ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை 14,999 ரூபாயிலிருந்து 9,449 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

45
xiaomi

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை 10,799 ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனும் தள்ளுபடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனை 13,749 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம்.மிகக்குறைந்த விலையாக 6,999 ரூபாய்க்கு ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் ரெட்மி 9i விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

55

டிவி வகைகள் என வரும் போது, Mi TV QLED 4K டிவியின் விலை 46,999 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ வெறும் 1,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதறகான முன்பதிவும் நடைபெறுகிறது. 
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories