Amazon Great Indian Sale: எந்த மாதிரியான சலுகைகள் உள்ளன?

First Published | Sep 19, 2022, 2:29 PM IST

அமேசான் கிரேட் இந்தியன் சேல் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இது குறித்த சிறு விவரங்களை இங்குக் காணலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஜாம்புவானாக திகழும் அமேசான் நிறுவனம் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல், கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்குகிறது. பிரைம் சந்தாதாரர்களுக்கு ஒரு நாளுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதியே இந்த விற்பனை தொடங்குகிறது. 
 

இதில் டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, ஸ்மார்ட்போன்கள், உதரிபாகங்கள், ஆடை அலங்காரப் பொருட்கள், கேட்ஜெட்ஸ், ஸ்டேஷனரி, கிப்ட் பொருட்கள் என  பெரும்பாலான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் வழங்கப்படும். நடப்பு ஆண்டிலேயே மிகக்குறைந்த விலையில் பொருட்களை வாங்கி வேண்டுமென்றால் அது, இதுபோன்ற ஆஃபரில் தான் கிடைக்கும். 

Tap to resize

அமேசானின் ஆஃபரை தவிர்த்து, எஸ்பிஐ வங்கி கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்தொகை செலுத்தும் திட்டமும் தொடங்கியுள்ளது. டிமாண்ட் அதிகமுள்ள பொருட்களை தவறாமல் வாங்க வேண்டும், ஸ்டாக் தீர்ந்து போகும் முன்பு வாங்கி விட வேண்டும் என்று நினைப்பவர்கள், 1 ரூபாய் முன்தொகை செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 

இந்த முன்தொகை செலுத்தும் திட்டமானது செப்டம்பர் 24 ஆம் தேதி வரையில் மட்டுமே இருக்கும். எனவே, 1 ரூபாய் முன்தொகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் செப் 24க்குள் குறிப்பிட்ட அந்த பொருளை வாங்கிவிட வேண்டும். இவ்வாறு முன்பதிவு செய்து வாங்கும் பொருட்களுக்கும் வங்கி சலுகைகள் உண்டு.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ரூபாய் தள்ளுபடி என்பது குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சலுகை குறித்த முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

நீண்ட நாட்களாக டிவி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்க நினைத்தவர்களுக்கு இது நல்ல நேரம், அமேசானின் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம்

அமேசானைப் போலவே, ஃபிளிப்கார்ட் நிறுவனமும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் ஆஃபர் விற்பனையை, அதே செப்டம்பர் 23 ஆம் தேதியில் தொடங்குகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருளைபிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா என மற்ற ஷாப்பிங் தளங்களிலும் சென்று பார்வையிட்டு குறைந்த விலை எந்த தளத்தில் உள்ளதோ, அந்த தளத்தில் வாங்கலாம். 

Latest Videos

click me!