இணைய உலகில் நம்பர் ஒன் இடத்தில் கூகுள் இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு தயாரிப்புகளையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், கூகுள் தேடலின் ஒரு அம்சமே இமேஜ் சேர்ச் (Image Search) ஆகும். இப்போது உள்ள ஸ்மார்ட்போன்களில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் முறை பலருக்கும் தெரிந்திருக்கும்.
அதேபோல தான் கூகுள் இமேஜ் சேர்ச். ஒரு பொருளை நாம் பார்க்கிறோம். அந்த பொருளை பற்றிய விவரங்கள் நமக்க வேண்டும் என்றால், சாதாரணமாக அதை போட்டோ எடுத்தாலே போதும், அதன் முழு விவரங்களும் வந்துவிடும்.
கூகுள் இமெஜ் சேர்ச் பயன்படுத்துவது எப்படி?
இவ்வாறு கூகுள் இமெஜ் சேர்ச்சை பயன்படுத்துவதற்கு, முதலில் Google.com என கூகுளின் முகப்பு பக்கதத்திற்குச் செல்ல வேண்டும். தேடல் பெட்டியின் அருகில் கேமரா ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா இயங்கும். இதை வைத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பொருளை போட்டோ எடுக்கவும். அவ்வளவு தான். இப்போது நீங்கள் படம் பிடித்த பொருளின் விவரங்களை ஆன்லைனில் பார்க்க முடியும்.
வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அருமையான அப்டேட் !!
பயிற்சிக்காக ஏற்கெனவே சொன்னது போல், ஒரு புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். கூகுள் முகப்பு பக்கத்திற்குச் சென்று, கேமரா ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது புத்தகத்தை போட்டோ எடுங்கள். நீங்கள் படமெடுத்த புத்தகம் ஆன்லைனில் எந்த ஷாப்பிங் தளத்தில் கிடைக்கிறது, அதன் விலை எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் பார்க்க முடியும்.
வெறும் பொருளை மட்டும் தான் எடுக்க முடியும் என்பது இல்லை. பறவைகள், விலங்குகள், கால்நடைகள், செடிகள், வளர்ப்புப் பிராணிகள், அவ்வளவு ஏன் தெருமுனையில் இருக்கும் சுவரொட்டிகளை கூட நீங்கள் படம் பிடித்து அதன் விவரங்களைக் காணலாம்.