ஐபோன் விற்பனையை உடனடியாக நிறுத்த அரசு உத்தரவு

First Published | Sep 9, 2022, 2:01 PM IST

சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர் அபராதம் விதித்த பிரேசில் அரசாங்கம், தொடர்ந்து விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபோன் 14 மாடல் செல்போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் அனுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகப்படுத்தப் பட்டன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரேசில் அரசாங்கம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

பெரும்பாலும் அனைத்து செல்போன் நிறுவனங்களும் சார்ஜர்களுடன் சேர்த்தே செல்போன்களை விற்பனை செய்கின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் மட்டும் சார்ஜர் இல்லாமல் செல்போனை விற்பனை செய்கிறது. சார்ஜர் இல்லாமல் விற்கப்படுவதால் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Tap to resize

இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் விற்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் விற்பனைக்கு தடை விதிப்பதாக பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சார்ஜர் என்பது ஒரு செல்போனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதேபோன்று சார்ஜர் இல்லாமல் விற்கப்படும் செல்போன் முழுமை பெறாத ஒன்றாகவே கருதப்படுகிறது. சார்ஜர் இல்லாததால் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என்ற ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் கிடையாது.
 

எனவே ஆப்பிள் நிறுவனத்தின் 12 மற்றும் அதற்கு பிந்தைய வெளியீடுகளில் சார்ஜர் இல்லாமல் விற்கப்படும் ஐபோன்களுக்கு உள்நாட்டில் தடை விதிக்கப்படுகிறது. மேலும் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படுவதாகவும்” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே இந்த விசயத்தில் பிரேசில் நாட்டில் பல நீதிமன்றங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கும், இணைப்பதற்கும் வேறு வழிகளை அறிந்திருக்கிறார்கள் என்று நம்புகிறோம். இந்த வழக்கையும் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!
 

Latest Videos

click me!