Facebook : ஃபேஸ்புக்கில் இனி இந்த வசதி கிடையாதாம்! மெட்டா அதிரடி

First Published Sep 5, 2022, 4:20 PM IST

அக்டோபர் 1ம் தேதி முதல் ஃபேஸ்புக்கில் நெய்பர்ஹூட்ஸ் (Neighborhoods)  எனப்படும் உள்ளூர் அம்சங்கள் என்ற திட்டத்தை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
 

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்கில் ‘நெய்பர்ஹூட்ஸ்’ எனப்படும் அதன் ஹைப்பர்லோகல் (உள்ளூர் அம்சங்கள்) திட்டத்தை முதன்முதலில் கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தளமானது மக்களுக்கு அவர்களது அக்கம்பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைத்திட உதவுகிறது. மேலும், உள்ளூரில் உள்ள புதிய இடங்களைக் கண்டறியவும் மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சேவையில் சேரவும், அதற்கான சுயவிவரத்தை உருவாக்குவதற்குமான வசதி விருப்பம் ஃபேஸ்புக்கில் வழங்கப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டம் பரவலாக விரிவுபடுத்தப்படவில்லை, ஒருவேளை நெய்பர்ஹூட் அம்சத்தை நிறுவத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து தெளிவான பதிலையோ அல்லது காரணத்தையோ மெட்டா தரப்பில் கூறப்படவில்லை.

மேலும், சமீப காலமாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது செலவுகளை எந்தவகையில் குறைக்கலாம் மட்டுமே மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், நெய்பர்ஹூட் நிறுத்தப்படுவதால், பயனர்களிடமிருந்து அல்லது நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் கால்களுக்கு இனி கட்டணம்? வாடிக்கையாளர்கள் கவலை
 

நெய்பர்ஹூட் குறித்து ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் நெய்பர்ஹூட் தொடங்கியபோது, ​​உள்ளூர் சமூகங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம், குழுக்கள் மூலம் இதைச் செய்வதற்கான சிறந்த வழியைக் கற்றுக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த சேவை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொபைல்ல சார்ஜ் நிக்கலையா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
 

முன்னதாக புராடக்டுகளை டேக் செய்து, லைவ் வீடியோ மூலமாக அதற்கான வர்த்தகத்தை மேற்கொள்ளக் கூடிய லைவ் ஷாப்பிங் வசதி அக்டோபர் 1ம் தேதி முதல் செயல்படாது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. செலவுகளை குறைக்கும் நோக்கில், லாபத்தை அதிகப்படுத்தும் வகையில், ஃபேஸ்புக்கின் துணைநிறுவனமான வாட்ஸ்அப்பில், இனி ஆன்லைனில் கால் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

உங்கள் போன் 5ஜி சேவையை ஏற்குமா? பார்ப்பது எப்படி? இதை செய்தால் கண்டுபிடித்துவிடலாம்!!
 

click me!