வாட்ஸ்அப் கால்களுக்கு இனி கட்டணம்? வாடிக்கையாளர்கள் கவலை

First Published | Sep 5, 2022, 11:59 AM IST

இனைய சேவை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இலவச கால்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற டிராயின் பரிந்துரை மீது தொலைத்தொடர்பு துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது.
 

வாட்ஸ்அப் கால்களுக்கு இனி கட்டணம்?

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மக்கள் தொகை மற்றும் வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வணிகம் செய்து வருகின்றன. அதன்படி வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், கூகுள் டியோ போன்றவை பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றன. 

மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி ஆடியோ கால், வீடியோ கால், குரூப் சேட் போன்ற அழைப்புகளை இலவசமாகவே மேற்கொள்ளலாம். இலவச அழைப்புகளால் தங்களுக்கு பாதிப்பு உள்ளதாக தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் இது தொடர்பாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

வாட்ஸ்அப் கால்களுக்கு இனி கட்டணம்?

முன்னதாக கடந்த 2008ம் ஆண்டே இணையதளத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இலவச அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறையிடம் (DOT) பரிந்துரை ஒன்றை வழங்கியது. ஆனால், பரிந்துரை வழங்கப்பட்ட காலத்தில் இந்தியாவில் இணையதள சேவை ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் இதனை தொலைத் தொடர்புத்துறை இதனை கிடப்பில் போட்டது. மேலும் 2016 - 17ம் ஆண்டில் பரிந்துரை குறித்து நினைவூட்டப்பட்டது.

whatsapp:meta: ஜூலையில் 24 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்: வாட்ஸ்அப் நடவடிக்கை
 

Tap to resize

வாட்ஸ்அப் கால்களுக்கு இனி கட்டணம்?

தனியார் நிறுவனங்களின் தொடர் அழுத்தங்களைத் தொடர்ந்து தொலைத் தொடர்புதுறை அறிக்கை மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முன்னர் அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு டிராயிடம் DOT கோரியுள்ளது. 

டிராயின் பரிந்துரை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலவச கால் சேவைகளை வழங்கி வரும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் டியோ, டெலகிராம் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படும்.

இனி வாட்சப் மூலமாக ஈசியாக பொருட்கள் வாங்கலாம்.. ஜியோமார்ட் & மெட்டா அதிரடி அறிவிப்பு.!!
 

Latest Videos

click me!