உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய தொழில்நுட்பத்திற்காகவும், விண்வெளி ஆராய்ச்சிக்காகவும் பல கோடி ரூபாய் செலவு செய்து ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. வெளிநாட்டு செயற்கை கோள்களையும் வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை செய்து வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான 155 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஒ, நியூசர், 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப் -1 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாது ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது.