5 - டொயோட்டா கிளான்சா AMT / மாருதி சுசுகி பலேனோ AMT
2022 மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்சா மாடல்களில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் டூயல்ஜெட் K12N பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்கள் லிட்டருக்கு 22.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. புதிய பலேனோ மாடல் விலை ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிளான்சா மாடல் விலை ரூ. 6 லட்சத்து 39 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
25
மாருதி சுசுகி ஸ்விப்ட் AMT
4 - மாருதி சுசுகி ஸ்விப்ட் AMT
மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலில் K12N பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 90 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.2 கிலோமீட்டரும், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.
35
மாருதி சுசுகி டிசையர் AMT
3- மாருதி சுசுகி டிசையர் AMT
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புது பேஸ்லிப்ட் டிசையர் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருந்தது. இவற்றில் மிக முக்கிய அப்டேட் ஆக 1.2 லிட்டர் K12N பெட்ரோல் என்ஜின் பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாடலில் உள்ள என்ஜினை விட 7 ஹெச்.பி. வரை அதிக திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மேனுவல் மாடல் லிட்டருக்கு 23.26 கிலோமீட்டர் மைலேஜும், ஆட்டோமேடிக் மாடல் லிட்டருக்கு 24.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது இந்தியாவில் கிடைக்கும் அதிக மைலேஜ் கொண்ட செடான் மாடல் ஆகும்.
45
மாருதி சுசுகி வேகன்ஆர் R 1.0 MT
2 -மாருதி சுசுகி வேகன்ஆர் R 1.0 MT
மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல் அதிக மைலேஜ் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாடல் எனலாம். இதில் 1.2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் சிறிய 1 லிட்டர் என்ஜின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.19 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதன் 1.2 லிட்டர் ஆட்டோமேடிக் மாடல் லிட்டருக்கு 24.43 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
55
மாருதி சுசுகி செலரியோ VXi AMT
1- மாருதி சுசுகி செலரியோ VXi AMT
மாருதி சுசுகி செலரியோ மாடல் லிட்டருக்கு 26.68 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது இந்திய சந்தையில் அதிக மைலேஜ் வழங்கும் கார் மாடல்களில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து செலரியோ ZXi மற்றும் ZXi+ AMT வேரியண்ட்கள் 26 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. செலரியோ மாடலில் குறைந்த மைலேஜ் வழங்கும் மாடல் கூட லிட்டருக்கு 24.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.