ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் நாள்தோறும் 1 ஜிபி டேட்டா என்ற புதிய சலுகை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.ஜியோ அறிமுகமான பிறகு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து தற்போது வரை, ஜியோ வை மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர். இதனால் மிக பிரபலமாக இருந்த ஏர்செல் நிறுவனமே திவாலாகக்கூடிய நிலையில் உள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.448-க்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நாள்தோறும் 1 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என தெரிவித்துள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். அனுப்ப இயலும். ஜியோவின் அதிரடி சலுகைகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில், இந்தப் புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து வட மற்றும் தென்இந்தியா முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடுத்தவும், 5 ஜி சேவையை இந்திய சந்தையில் தொடங்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.