சந்தையை கலக்க வருகிறது iPhone 8ஆப்பிள் நிறுவனத்தில் i phone என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் iPhone மொபைலின் அடுத்த வெர்ஷன் எப்போழுதுதான் சந்தைக்கு வருமோ என பலரும் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இந்நிலையில், செப்டெம்பர் 12 ஆம் தேதி iPhone 8 சந்தைக்கு வர உள்ளது .அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து அறிமுகம் செய்ய உள்ள இந்த போன், தற்போது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த மொபைல் அறிமுக விழாவில்,ஐபோன் 7எஸ், ஐபோன் 7 ப்ளஸ் , ஸ்மார்ட் டிவி மற்றும் எல்டிஇ வசதியுடன் கூடிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது அதிக விலைக்கு விற்கப்படும் ஐ போனின் இந்த வெர்ஷனின் விலை குறித்த தகவல் இன்னும் சரியாக தெரியவில்லை .இருந்தபோதிலும், அறிமுகமான சில நாட்களில் விற்பனைக்கு வரும் போதுதான், இந்தியாவில் இந்த மொபைலின் விலை என்னவென்று தெரிய வரும்.