காவல் நிலையம் சென்றுதான் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றால் அதை தான் நாம் செய்ய முடியும். அதே வேளையில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது,வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலமாக எப்ஐஆர் பதிவு செய்ய முடியும் என்பதை எத்தனை பேருக்கு தெரியும் ?எப்படி பயன்படுத்துவது ?தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது பெரும் தண்டனைக்குரியதுதவறான புகார்களை பதிவு செய்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்எப்படி பதிவு செய்வது ?http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0 என்ற இணையதளத்திற்கு சென்று, district , name , date of birth,mobile number,email id உள்ளிட்ட பல தகவல்களை பதிவிடவும்.4mb அளவிற்கு , புகார் தொடர்பான கோப்புகளை இதில் இணைக்கலாம்அனைத்து பதிவு செய்த பிறகு, FIR NUMBER மற்றும் ரசீது கிடைக்கும். இதனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.Tamilnadu Police Citizen Portal என்ற இணையதளத்தில், FIR எண்ணை பதிவிட்டு, நாம் கொடுத்த புகாரின் அடிப்படையிலான விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்