அக். 1 தேதி இந்தியா மொபைல் காங்கிரஸ்! 5ஜி அறிவிப்பு?

First Published Sep 19, 2022, 1:43 PM IST

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் இந்திய மொபைல் காங்கிரஸ் நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்வில் 5ஜி சேவை குறித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ஐ.எம்.சி எனப்படும் இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும். இந்திய தொலைத்தொடர்பு துறையும், செல்லுலார் ஆபரேட்டர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு தான், ஆசியாவிலேயே பிரம்மாண்டமான தொழில்நுட்ப கருத்தரங்கம் ஆகும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, அக்டோபர் 4 ஆம் தேதி முடிவடைகிறது.

5g

பொதுவாக இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் முக்கியமான அறிவிப்புகள், மேம்படுத்துதல் குறித்த நிகழ்வும் அரங்கேறும். அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் 5ஜி சேவை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கு முழுமுயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இதேபோல், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 5ஜி சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனை அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றன. 
 

இப்படியான சூழலில் இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் 5ஜி சேவை குறித்த விவரங்கள் தான் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5ஜி அறிவிப்புகள் இல்லை எனில், இந்தக் கூட்டம் முடிந்ததும் மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிகாரப்பூர்வமாக 5ஜி அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.

click me!