"அப்போ போர் தண்ணீரையும், கிணற்று தண்ணீரையும் அப்படியே குடிக்கலாமா?" என்று கேட்டால், அது அதைவிட ஆபத்து. இன்றைய காலகட்டத்தில் நிலத்தடி நீரில் ரசாயனக் கழிவுகளும், உப்பும் அதிகமாக உள்ளன.
நாம் செய்ய வேண்டிய ஸ்மார்ட்டான தீர்வுகள் இதோ:
- TDS அளவை சரிபார்க்கவும்: உங்கள் வீட்டு தண்ணீரின் TDS (Total Dissolved Solids) அளவு 300 முதல் 500-க்கு கீழ் இருந்தால், உங்களுக்கு RO தேவையே இல்லை! ஒரு சாதாரண UV + UF பில்டரே போதுமானது. TDS 500-க்கு மேல் இருந்தால் மட்டுமே RO தேவை.
- TDS Controller / Mineral Cartridge: உங்கள் RO மிஷினில் 'TDS Controller' அல்லது 'Mineral Modulator' இருக்கிறதா என்று பாருங்கள். இது வடிகட்டிய தண்ணீரில் மீண்டும் தேவையான தாதுக்களை சேர்க்கும் தொழில்நுட்பம் ஆகும்.
- மண்பாண்ட முறை (Traditional Touch): RO தண்ணீரை அப்படியே குடிக்காமல், ஒரு மண் பானையிலோ அல்லது செம்பு (Copper) பாத்திரத்திலோ ஊற்றி வைத்து சில மணி நேரம் கழித்து குடியுங்கள். மண்பானை தண்ணீரின் அமிலத்தன்மையை மாற்றி, காரத்தன்மையாக (Alkaline) மாற்றும்; இழந்த தாதுக்களையும் ஓரளவிற்கு மீட்டுத்தரும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். தொழில்நுட்பம் நம்மை நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டுமே தவிர, அதுவே ஒரு நோயாக மாறிவிடக் கூடாது.
கிருமிகள் இல்லாத சுத்தமான தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான தண்ணீரும் முக்கியம். எனவே, உங்கள் வீட்டு தண்ணீரின் தரத்தை பரிசோதித்து, சரியான சுத்திகரிப்பு முறையை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்!
இதையும் படிங்க : Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?