ரிலையன்ஸ் ஜியோ தனது பிளானின் வேலிடிட்டியை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்துள்ளது. இந்த மாற்றம் பயனர்களின் தினசரி செலவை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பிளான் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
டெலிகாம் மார்க்கெட்டில் மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.195 கிரிக்கெட் டேட்டா பிளானில் பெரிய மாற்றம் செய்துள்ளது. விலையை மாற்றாமல் இருந்தாலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்திருப்பது பயனர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருந்த இந்த பிளான், இப்போது குறுகிய கால டேட்டா ஆப்ஷனாக மாறியுள்ளது.
24
ரூ.195 பிளான்
முன்னதாக ரூ.195 பிளான் 90 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால் புதிய அப்டேட்டில் அது 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே விலையில் 60 நாட்கள் செல்லுபடியாகும் தன்மை குறைந்துவிட்டது. இது மாதந்திர செலவை அதிகரிக்கும் ஒரு மாற்றமாக பயனர்கள் பார்க்கிறார்கள். இந்த பிளானின் டேட்டா நன்மைகள் மாற்றமின்றி தொடர்கின்றன. மொத்தமாக 15ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.
34
90 நாட்கள் மாற்றம்
இந்த தரவு முடிந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். முக்கியமாக, இது ஒரு தரவு மட்டும் பேக் என்பதால் குரல் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் இதில் இடம்பெறாது. மேலும், இந்த பிளானின் சிறப்பு அம்சமாக 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு கூடுதல் பலனாக இருக்கும். ஆனால் செலவு கணக்கில் பார்த்தால், பயனர்களின் சுமை அதிகரித்துள்ளது. முன்பு ரூ.195க்கு 90 நாட்கள் செல்லுபடியாகும். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2.16 மட்டுமே செலவாகியது. இப்போது அதே ரூ.195க்கு 30 நாட்கள் மட்டுமே கிடைப்பதால், நாள் செலவு ரூ.6.50க்கு உயர்ந்துள்ளது. இதனால் தினசரி செலவில் சுமார் ரூ.4.34 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.