அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.
இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் ஒரு நிமிடமும் இல்லாமல் இருக்க முடியாத அளவுக்கு முக்கியமானதாக மாறிவிட்டது. பேசுவதற்கும், பண பரிவர்த்தனை, ஆன்லைன் ஷாப்பிங், யுபிஐ போன்ற சேவைகளுக்கும் மொபைல் அவசியமாகிறது. ஆனால், இவற்றை எல்லாம் பயன்படுத்த, சரியான ரீசார்ஜ் பிளான் இருக்க வேண்டும். இல்லையெனில், கால்ஸ், இன்டர்நெட், ஓடிபி போன்ற சேவைகள் நிறுத்தப்படும்.
25
தினமும் 3ஜிபி டேட்டா
பொதுவாக பலர் மாதம், 3 மாதம் அல்லது 6 மாதம் என ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். ஆனால், அந்த செல்லுபடியாகும் போது மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசரம் மற்றும் கவலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்வது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இதன் மூலம் நீண்ட கால நிம்மதியும் கிடைக்கும்.
35
பிஎஸ்என்எல் 365 நாள் பிளான்
இந்த நிலையில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.2799க்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த பிளான், பயனர்களுக்கு மிகுந்த சலுகைகள் வழங்கப்படும். ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், முழு வருடமும் எந்த பதட்டமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS கிடைக்கும். அதாவது, ஒரு நாளுக்கு சுமார் ரூ.7.66 செலவில் இந்த அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கும், தொடர்ந்து இன்டர்நெட் தேவைப்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
55
BSNL அன்லிமிடெட் கால்ஸ்
தற்போது ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் நீண்டகால திட்டங்களுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் இந்த குறைந்த விலையில் வழங்குகிறது. போட்டியில் நிலைத்து நிற்க, பிஎஸ்என்எல் தொடர்ந்து புதிய சலுகைகளை கொண்டு வருகிறது. குறைந்த செலவில் அதிக பயன் தேடுபவர்களுக்கு, இந்த 365 நாள் திட்டம் நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.