Red Magic 11 Air ரெட் மேஜிக் 11 ஏர் வெளியீடு உறுதி! ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 7000mAh பேட்டரி மற்றும் 24GB ரேம் உடன் வரும் புதிய போன். முழு விபரங்கள் இதோ.
Red Magic 11 Air ரெட் மேஜிக் 11 ஏர் வெளியீடு உறுதி
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட் மேஜிக், தனது அடுத்த அதிரடி வரவான 'ரெட் மேஜிக் 11 ஏர்' (Red Magic 11 Air) ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஜியாங் சாவோ, சமூக வலைதளமான வெய்போவில் (Weibo) இதுகுறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்த போன் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சரியான வெளியீட்டு தேதி மற்றும் முழுமையான வன்பொருள் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. வரும் வாரங்களில் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26
ஏப்ரல் மாதம் வெளியான மேஜிக் 10 ஏர்-ன் வாரிசு
புதிய ரெட் மேஜிக் 11 ஏர் மாடலானது, கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேஜிக் 10 ஏர் ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பாக வெளியாகவுள்ளது. முந்தைய மாடல் கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, உயர் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) திரையுடன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
36
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் கூலிங் வசதி
பிரபல டிப்ஸ்டரான 'டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்' வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய போன் குவால்காமின் சக்திவாய்ந்த 'ஸ்னாப்டிராகன் 8 எலைட்' (Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயங்கும் எனத் தெரிகிறது. இது கேமிங் மற்றும் அதிக செயல்திறன் தேவைப்படும் பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், ரெட் மேஜிக் போன்களுக்கே உரித்தான 'ஆக்டிவ் கூலிங் ஃபேன்' (Active Cooling Fan) வசதியும் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது நீண்ட நேரம் கேம் விளையாடும்போது போன் சூளாவதைத் தடுக்க உதவும்.
ரெட் மேஜிக் 11 ஏர் சமீபத்தில் TENAA சான்றிதழ் இணையதளத்தில் NX799J என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டது. அதன்படி, இந்த போன் 6.85 இன்ச் OLED திரையைக் கொண்டிருக்கும் என்றும், இது 1,216 x 2,688 பிக்சல் தெளிவுத்திறனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, திரைக்கு அடியில் இருக்கும் (Under-display) 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம். இது முழுமையான திரை அனுபவத்தை விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
56
கேமரா, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விபரங்கள்
புகைப்படங்களை எடுக்க, பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் இடம்பெற வாய்ப்புள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த போன் அதிகபட்சமாக 24GB ரேம் மற்றும் 1TB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வரை பல்வேறு வகைகளில் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதன் அடிப்படை மாடல் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வரலாம். மேலும், இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரெட் மேஜிக் ஓஎஸ் 11-ல் இயங்கும்.
66
மெகா பேட்டரி மற்றும் மெல்லிய வடிவமைப்பு
இந்த ஸ்மார்ட்போனின் மற்றுமொரு சிறப்பம்சமாக அதன் பேட்டரி அமையும். இதில் 6,780mAh பேட்டரி இடம்பெறும் என்றும், இது 7,000mAh பேட்டரி என சந்தைப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், இந்த போன் மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 7.85 மிமீ தடிமன் மற்றும் சுமார் 207 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.