"பவர் பேங்க் தேவையே இல்லை.." 7000mAh ராட்சத பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 90 - டிசம்பர் 16 ரிலீஸ்!

Published : Dec 11, 2025, 07:30 AM IST

Realme Narzo 90 ரியல்மி நார்சோ 90 சீரிஸ் இந்தியாவில் டிசம்பர் 16 அறிமுகம். 7000mAh பேட்டரி, 60W சார்ஜிங் மற்றும் 50MP கேமரா சிறப்பம்சங்கள்.

PREV
16
"இனி சார்ஜரைத் தேடி அலைய வேண்டாம்.. பேட்டரியில் ஒரு அசுரன்!"

ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் கெத்து காட்டும் ரியல்மி (Realme), தற்போது தனது நார்சோ சீரிஸில் அடுத்த அதிரடியைக் காட்டத் தயாராகிவிட்டது. வரும் டிசம்பர் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ள Realme Narzo 90 5G மற்றும் Narzo 90x 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் தளத்தில் இதற்கெனத் தனியாக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள தகவல்கள் டெக் பிரியர்களை வாய்பிளக்க வைத்துள்ளன.

26
தீராத பேட்டரி.. 7000mAh பவர்!

இந்த இரண்டு போன்களிலும் உள்ள மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் பேட்டரி தான். வழக்கமாக 5000mAh பேட்டரி பார்த்திருப்போம். ஆனால், நார்சோ 90 சீரிஸில் 7000mAh Titan Battery கொடுக்கப்பட்டுள்ளது. இது நார்சோ வரிசையிலேயே மிகப்பெரிய பேட்டரி ஆகும். இதை வேகமாக சார்ஜ் செய்ய 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

குறிப்பாக, Narzo 90 5G மாடலில் 'பைபாஸ் சார்ஜிங்' (Bypass Charging) மற்றும் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற கூடுதல் வசதிகளும் உள்ளன. இது கேமிங் பிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

36
தண்ணீர் பட்டாலும் கவலை இல்லை

இந்த போன் IP66, IP68 மற்றும் IP69 தரச்சான்று பெற்றுள்ளது. அதாவது தூசி, தண்ணீர் தெறிப்பது மட்டுமல்லாமல், அதிக அழுத்தத்தில் வரும் நீரையும் தாங்கும் சக்தி கொண்டது.

பேட்டரி பேக்கப் எவ்வளவு நேரம்?

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கின்படி:

• Narzo 90 5G: தொடர்ந்து 8.1 மணி நேரம் கேம் விளையாடலாம். 24 மணி நேரம் வீடியோ பார்க்கலாம். 143 மணி நேரம் பாட்டு கேட்கலாம்.

• Narzo 90x 5G: 23.6 மணி நேரம் ஆன்லைன் வீடியோ பார்க்கலாம். 61.3 மணி நேரம் போன் பேசலாம்.

இனி நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் போது பவர் பேங்க் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது போல!

46
கண்ணைப் பறிக்கும் பிரகாசமான திரை

டிஸ்பிளேவிலும் ரியல்மி குறை வைக்கவில்லை. இரண்டு மாடல்களிலும் பன்ச்-ஹோல் (Punch-hole) டிஸ்பிளே உள்ளது.

• Narzo 90 5G: இதில் அதிகபட்சமாக 4,000 நிட்ஸ் (nits) பீக் பிரைட்னஸ் உள்ளது. வெயிலில் பயன்படுத்தினாலும் திரை தெளிவாகத் தெரியும்.

• Narzo 90x 5G: இதில் 1,200 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. இது கேமிங் மற்றும் ஸ்க்ரோலிங் அனுபவத்தை மென்மையாக்கும்.

56
50MP கேமரா மற்றும் AI மேஜிக்

புகைப்படம் எடுப்பதற்காகப் பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் பல AI டூல்கள் இணைக்கப்பட்டுள்ளன:

• AI Edit Genie & AI Eraser: போட்டோவில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கலாம்.

• AI Ultra Clarity: மங்கலான படங்களைத் தெளிவாக்கலாம்.

டிசைனைப் பொறுத்தவரை, நார்சோ 90 சதுர வடிவ கேமரா மாட்யூலுடனும், நார்சோ 90x செவ்வக வடிவ மாட்யூலுடனும் வருகிறது.

66
விற்பனை எப்போது?

வரும் டிசம்பர் 16-ம் தேதி அறிமுகமாகும் இந்த போன்கள், அமேசான் மற்றும் ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வரும். பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன் வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாக இருக்கும்!

Read more Photos on
click me!

Recommended Stories