Vivo X300 இந்தியாவில் Vivo X300 மற்றும் X300 Pro விற்பனை தொடங்கியது. 200MP கேமரா, 6510mAh பேட்டரி என மிரட்டும் அம்சங்கள். விலை மற்றும் ஆஃபர் விபரங்களை இங்கே காணுங்கள்.
"கையில கேமரா இருக்கா? இல்ல போன் இருக்கா?" - வியக்க வைக்கும் விவோவின் புதிய மாடல்கள்!
ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விவோவின் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் (Flagship) மாடல்களான Vivo X300 மற்றும் X300 Pro ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. டிசம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன்கள், இப்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ ஸ்டோர்களில் வாங்கக் கிடைக்கின்றன. "புகைப்படம் எடுப்பதற்கு இனி டிஎஸ்எல்ஆர் கேமரா தேவையே இல்லை" என்று சொல்லும் அளவுக்கு, இதில் Zeiss லென்ஸ்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
27
விலை விபரங்கள்: கொஞ்சம் காஸ்ட்லி தான்!
பிரீமியம் போன் என்பதால் விலையும் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது.
• Vivo X300 Pro: இதன் 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 1,09,999 ஆகும்.
• Vivo X300: இதன் ஆரம்ப விலை (12GB + 256GB) ரூ. 75,999.
• அதிக வேரியண்ட்கள் தேவைப்படுவோருக்கு ரூ. 81,999 மற்றும் ரூ. 85,999 விலையிலும் மாடல்கள் உள்ளன.
37
அள்ளித் தரும் ஆஃபர்கள் (Launch Offers)
விவோ நிறுவனம் அறிமுக சலுகையாகப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது:
• குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு 10% உடனடி கேஷ்பேக்.
• மாதத்திற்கு வெறும் ரூ. 3,167 முதல் தொடங்கும் 'ஜீரோ காஸ்ட்'
• பழைய போனை மாற்றினால் 10% கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ்.
• விவோவின் TWS 3e இயர்பட்ஸை வெறும் ரூ. 1,499-க்கு வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு.
• ஜியோ 5ஜி பயனர்களுக்கு 18 மாதங்களுக்குக் கூகுளின் Gemini Pro Plan இலவசம் (இதன் மதிப்பு ரூ.35,100).
கேமரா: இதுதான் இந்த போனின் "ஹீரோ"
இந்த எக்ஸ் சீரிஸ் போன்களின் முக்கிய அடையாளமே அதன் கேமரா தான்.
57
Vivo X300 Pro:
• இதில் 50MP மெயின் கேமரா இருந்தாலும், 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் (Periscope Telephoto Lens) கொடுக்கப்பட்டுள்ளது தான் ஹைலைட். தூரத்தில் இருப்பதை மிகத் தெளிவாக ஜூம் செய்து படம் பிடிக்க இது உதவும்.
• Vivo X300: இதில் 200MP மெயின் கேமரா மற்றும் 50MP வைட் ஆங்கிள், 50MP டெலிபோட்டோ லென்ஸ்கள் உள்ளன.
இரண்டு போன்களிலுமே செல்ஃபி எடுக்க 50MP முன் பக்க கேமரா உள்ளது.
67
ஸ்பெஷல் கிட் (Telephoto Extender Kit)
புகைப்படக் கலைஞர்களுக்காகத் தனியாக ஒரு 'டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட்' விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 18,999. ஆனால், போனுடன் சேர்த்து வாங்கினால் ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கும். இதில் எக்ஸ்டெண்டர் லென்ஸ் மற்றும் அடாப்டர் ரிங் ஆகியவை இருக்கும்.
77
பேட்டரி மற்றும் செயல்திறன்
இரண்டு போன்களிலும் மீடியாடெக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் Dimensity 9500 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.