ஓசி-ல சுட்டது போதும்.. காசை வெட்டுங்க! AI நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு - என்னாச்சு?

Published : Dec 11, 2025, 07:00 AM IST

Royalties ஓபன்ஏஐ, கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்திய கன்டென்ட்களைப் பயன்படுத்த இனி ராயல்டி செலுத்த வேண்டும் என மத்திய அரசு குழு பரிந்துரைத்துள்ளது. இந்த புதிய விதிமுறை பற்றிய முழு விவரங்களை இங்கே படியுங்கள்.

PREV
16
AI கூகுள், OpenAI-க்கு இந்தியா வைத்த கிடுக்கிப்பிடி!

"டேட்டா தான் புது தங்கம்" (Data is the new oil) என்று சொல்லும் காலத்தில் நாம் இருக்கிறோம். இத்தனை நாட்களாக இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை இலவசமாக எடுத்துத் தங்களது AI மாடல்களை வளர்த்து வந்த கூகுள் மற்றும் OpenAI போன்ற நிறுவனங்களுக்கு, இந்தியா தற்போது மிகப்பெரிய "செக்" வைத்துள்ளது.

இந்திய செய்திகள், கலைப்படைப்புகள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்தி AI-க்கு பயிற்சி அளித்தால், அதற்கு இனி கட்டாயம் பணம் (Royalty) செலுத்த வேண்டும் என்ற அதிரடி விதியை இந்தியா கொண்டு வரவுள்ளது.

26
இனி எதுவும் "இலவசம்" இல்லை!

செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள், தங்களது சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் ஜெமினி (Gemini) போன்ற மாடல்களை உருவாக்க கோடிக்கணக்கான இணையப் பக்கங்களில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகின்றன. இது "நியாயமான பயன்பாடு" (Fair Use) என்று அந்த நிறுவனங்கள் கூறி வருகின்றன.

ஆனால், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குழு ஒன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், "இந்தியப் படைப்பாளிகளின் உழைப்பை இலவசமாகச் சுரண்ட முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதற்காக AI நிறுவனங்கள் வருவாயில் ஒரு பங்கை ராயல்டியாகக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

36
அமெரிக்கா வேறு.. இந்தியா வேறு!

உலக நாடுகள் பலவும் AI விஷயத்தில் குழப்பத்தில் இருக்கும்போது, இந்தியா தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

• அமெரிக்கா: அங்கு "Fair Use" என்ற பெயரில் டேட்டாவை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள AI நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது.

• ஐரோப்பா: படைப்பாளிகள் விரும்பினால் "எனது தகவலைப் பயன்படுத்தாதே" (Opt-out) என்று சொல்லும் உரிமை உள்ளது.

• இந்தியா: "Opt-out எல்லாம் வேலைக்கு ஆகாது. என் தகவலைப் பயன்படுத்தினால், எனக்குப் பணம் கொடு" என்ற அதிரடி அணுகுமுறையை இந்தியா கையில் எடுத்துள்ளது.

46
பணம் யாருக்குப் போகும்?

இந்த புதிய விதியின்படி, ஒவ்வொரு படைப்பாளியிடமும் தனித்தனியாக அனுமதி வாங்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, ஒரு மத்திய அமைப்பிடம் (Central Body) AI நிறுவனங்கள் ராயல்டி தொகையைச் செலுத்திவிட வேண்டும். அந்த அமைப்பு, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுக்கும்.

56
அலறும் டெக் நிறுவனங்கள்

இந்தியாவின் இந்த முடிவுக்கு நாஸ்காம் (NASSCOM) போன்ற தொழில்நுட்ப அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "இது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் கழுத்தை நெரிப்பது போலாகும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாது," என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனால், "எங்கள் செய்திகளையும், தரவுகளையும் வைத்து நீங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது, எங்களுக்கு ஏன் பங்கு தரக்கூடாது?" என்பது இந்தியப் படைப்பாளிகளின் வாதமாக உள்ளது.

66
அடுத்து என்ன நடக்கும்?

தற்போது இந்த வரைவு அறிக்கை மக்கள் மற்றும் இத்துறையினரின் கருத்து கேட்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்குள் இது குறித்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது சேவையைத் தொடரப் பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும். இது உலக அளவில் AI துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories