மிகப்பெரிய பேட்டரி.. புதிய சிப்.. ஒன்பிளஸ் 15R அம்சங்கள் லாஞ்சுக்கு முன்பு பட்டையை கிளப்புது

Published : Dec 09, 2025, 12:55 PM IST

ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன், பிராண்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய 7,400mAh பேட்டரியுடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த போன், 165Hz 1.5K AMOLED டிஸ்ப்ளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

PREV
13
ஒன்பிளஸ் 15R

ஒன்பிளஸ் பிராண்டின் வரலாற்றில் மிகப்பெரிய பேட்டரியான 7,400mAh, ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனில் இடம்பெறும். இது ஒன்பிளஸ் 15 போனின் 7,300mAh சாதனையை முறியடிக்கும். கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கு நீண்ட நேர சார்ஜ் வழங்கும் பேட்டரி இது. இந்த 7,400mAh பேட்டரி சிலிக்கான் நானோஸ்டாக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.

23
AMOLED டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் 165Hz 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் பீக் பிரைட்னஸ் 1,800 நிட்ஸ். நீண்ட நேரம் திரையைப் பார்க்கும்போது கண்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. ஒன்பிளஸ் 15R-ல் வினாடிக்கு 120 பிரேம்களில் 4K வீடியோ பதிவு செய்யும் திறன் இருக்கும். இது முன்பு பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 15-ல் மட்டுமே இருந்த அம்சம். டூயல் கேமரா அமைப்பு இருந்தாலும், சென்சார் திறன் வெளியிடப்படவில்லை.

33
டிசம்பர் 17

ஒன்பிளஸ் 15R, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டில் இயங்குகிறது. குவால்காமுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளில் இந்த சிப்செட் உருவாக்கப்பட்டதாக ஒன்பிளஸ் கூறுகிறது. இந்த சிப்செட்டுடன் வெளியாகும் முதல் போன் இதுவாகும். ஒன்பிளஸ் 15R டிசம்பர் 17 அன்று பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படும். போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் முந்தைய மாடலான ஒன்பிளஸ் 13R, ரூ.42,999 விலையில் இந்தியாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories