Elon Musk எலான் மஸ்கின் Grok 4.20 AI இன்னும் சில வாரங்களில் வெளியாகிறது. இது பங்குச்சந்தை சோதனையில் GPT-5.1 மற்றும் Gemini 3 Pro-வை விட சிறந்தது எனத் தகவல்.
எலான் மஸ்க் தனது xAI நிறுவனத்தின் அடுத்த பெரிய அப்டேட்டான 'Grok 4.20' இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த புதிய மாடல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நாம் இருப்பதால், இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் Grok 4.20 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் தான் Grok 4.1 வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு எலான் மஸ்க் தொழில்நுட்ப உலகை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
25
பங்குச்சந்தையில் மாஸ் காட்டிய Grok
அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே, 'Alpha Arena' எனப்படும் பங்குச்சந்தை உருவகப்படுத்துதல் (Simulation) தளத்தில் Grok 4.20 ரகசியமாகச் சோதிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு AI மாடலுக்கும் சுமார் 9 லட்சம் ரூபாய் (10,000 USD) விர்ச்சுவல் பணம் கொடுக்கப்பட்டு, இரண்டு வாரங்களில் பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட வேண்டும் என்று சவால் விடப்பட்டது. இந்த 'சீசன் 1.5' போட்டியில், Grok 4.20 என்று கருதப்படும் மாடல், உலகின் முன்னணி AI மாடல்களான GPT-5.1 மற்றும் கூகுளின் Gemini 3 Pro ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டது. மற்ற மாடல்கள் நஷ்டத்தைச் சந்தித்த நிலையில், Grok 4.20 மட்டும் 12 சதவீதம் லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
35
எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்கள்
இந்தச் சோதனையின் முடிவுகளைப் பார்க்கும்போது, Grok 4.20 நிதி மேலாண்மை (Financial Analysis) மற்றும் சிக்கலானத் தரவுகளைக் கையாள்வதில் கில்லாடியாக இருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக, நிஜ உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், எதிர்காலத்தைக் கணிப்பதற்கும் (Predictive Analysis) இது மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், xAI நிறுவனம் இதன் முழுமையான அம்சங்களை இன்னும் வெளியிடவில்லை. வெளியீட்டுத் தேதியில் இது குறித்த முழு விவரங்களும் தெரியவரும்.
இதற்கிடையில், சமீபத்தில் வெளியான Grok 4.1 ஃபாஸ்ட் மாடல், OpenRouter தளத்தில் ஒரு வாரத்தில் 1.16 டிரில்லியன் டோக்கன்களைச் செயலாக்கிப் புதிய சாதனை படைத்துள்ளது. இது Anthropic-ன் Claude 4.5 மற்றும் கூகுளின் Gemini 3 Pro-வின் பயன்பாட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். டெவலப்பர்கள் மத்தியில் Grok மாடல்களுக்கு மவுசு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
55
எதிர்காலக்கணிப்பு
Grok 4.20 ஆரம்பக்கட்டச் சோதனைகளிலேயே இவ்வளவு ஆதிக்கத்தைச் செலுத்துவது, செயற்கை நுண்ணறிவுத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எலான் மஸ்கின் இந்தப் புதிய மாடல், சந்தையில் உள்ள மற்ற ஜாம்பவான்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.