Network Tower
சிம் சிக்னல் பிரச்சனை
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. இந்தியாவின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் மற்ற இடங்களுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் எளிதாக கால் செய்து விட முடிகிறது. ஆனால் சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சிம்களில் சிக்னல் கிடைக்காமல் போய் விட்டால் கால் செய்வது சிக்கலாகி விடும்.
குறிப்பாக கிராமப்புறங்களிலும், நாம் பயணம் செய்யும்போதும் சிக்னல் அதிகம் கிடைக்காது. நாம் பயன்படுத்தும் சிம் டவர்கள் அங்கு அதிகம் இருக்காததே இதற்கு காரணமாகும். இந்நிலையில், இந்த சிக்னல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ஐசிஆர்) என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின்படி ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் பயனர்கள் இப்போது தங்கள் சொந்த சிம் சிக்னலை இழந்தாலும் கூட கிடைக்கக்கூடிய எந்த நெட்வொர்க்கையும் பயன்படுத்தி கால்களை மேற்கொள்ளலாம்.
Mobile Network Signal
மற்றொரு நெட்வொர்க்
அதாவது பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா பயனர்கள் இப்போது எந்த நெட்வொர்க்கையும் பயன்படுத்தி 4ஜி சேவைகளை அணுகலாம். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் வோடோபோன் சிம் வைத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அவசரமாக கால் செய்யும்போது சிக்னல் கிடைக்காமல் போகிறது. இதற்கு காரணம் உங்களுக்கு அருகில் வோடோபோன் நெட்வொர்க் டவர் ஏதுமில்லை.
உங்களுக்கு அருகில் ஜியோ, ஏர்டெல் நெட்வோர்க் டவர்கள் இருந்திருக்கும். ஆனால் நீங்கள் வோடோபோன் சிம் வைத்திருப்பதால் இந்த டவர்கள் உங்களுக்கு உபயோகமில்லாமல் இருந்திருக்கும். ஆனால் இனிமேல் ஐசிஆர் வசதியின்மூலம் உங்கள் வோடோபோன் சிம்மில் சிக்னல் கிடைக்காவிட்டாலும்,
அருகில் உள்ள ஜியோ, ஏர்டெல் நெட்வோர்க் டவர் நெட்வொர்க்கை பயன்படுத்தி உங்களால் தடையின்றி கால் செய்ய முடியும். 4ஜி நெட்வொர்க் அனுபவிக்க முடியும்.
இந்தியா முதல் அமெரிக்கா வரை; 'டிக் டாக்' செயலிக்கு தடை விதித்துள்ள நாடுகள் என்னென்ன?
Jio and Airtel
டிஜிட்டல் பாரத் நிதி
அதாவது ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகிய தனியார் செல்போன் சிம் நிறுவனங்கள் தனித்தனியாக நெட்வொர்க் டவர்களை அமைத்துள்ளன. இனிமேல் மத்திய அரசு டிஜிட்டல் பாரத் நிதி (டிபிஎன்) நிதியுதவின் கீழ் செல்போன் டவர்களை அமைக்க குறிப்பிட்ட தொகையை தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு வழங்கும். அதாவது டிபிஎன் நிதி உதவியுடன் தனியார் நிறுவனங்கள் செல்போன் டவர்களை அமைக்கும். அப்போது ஜியோ, ஏர்டெல், வோடோபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களின் டவர்களின் உள்கட்டமைப்பைப் (நெட்வொர்க்கை) பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கும்.
இதன்மூலம் உங்கள் வோடோபோன் சிம் சிக்னலை இழந்தாலும் அருகில் உள்ள ஜியோ அல்லது ஏர்டெல் செல்போன் டவர்களில் இருந்து கிடைக்கக்கூடிய நெட்வொர்க்கை பயன்படுத்தி உங்களால் தடையின்றி போன் பேச முடியும். 4ஜி நெட்வொர்க்கையும் பயன்படுத்த முடியும். இந்த ஐசிஆர் வசதி ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் தனித்தனியாக அதிக டவர்களை அமைக்க வேண்டிய தேவையை குறைக்கிறது.
4G Network Service
தடையின்றி கால் செய்யலாம்
மேலும் இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும், எந்த ஒரு சிம் பயன்படுத்துபவர்களும் தடையின்றி சேவையை அனுபவிக்க முடியும். இவ்வாறு இந்தியா முழுவதும் 27,000 டவர்களை நிறுவி 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு நம்பகமான 4ஜி இணைப்பை தடையின்றி வழங்க மத்தி அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் டிபிஎன் நிதி ஆதரவுடன் டவர்களை நிறுவும் செல்போன் நிறுவனங்கள் மட்டுமே தங்களது நெட்வொர்க்கை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுத்த மக்களும் இனி ஐபோன் வாங்கலாம்; போட்டி போட்டு விலையை குறைத்த அமேசான், ப்ளிப்கார்ட்!