லேப்டாப்புக்கு அருகில் இதை மட்டும் வைக்காதீங்க.. யாருக்கும் தெரியாத ஆபத்து..!

Published : Dec 26, 2025, 04:25 PM IST

லேப்டாப்பின் அருகில் காபி, டீ, தண்ணீர் வைத்தால் மெதுவாக பெரிய சேதம் ஏற்படலாம். திரவ சேதம் எப்போது, எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு லேப்டாப்பை பாதுகாக்கும் எளிய வழிகளை பார்க்கலாம்.

PREV
14
லேப்டாப் பாதுகாப்பு

லேப்டாப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். வேலை தொடங்கும் போது காபி, மதியம் தண்ணீர், மாலையில் டீ என்று மேசையில் ஒரு கப் அல்லது பாட்டில் நிரந்தரமாக இடம் பிடித்து விடும். “இவ்வளவு தூரம் பாதுகாப்பாகத்தானே இருக்கு” ​​என்ற நம்பிக்கையில்தான் அந்த பழக்கம் தொடர்கிறது. பல நாட்கள் ஒன்றும் நடக்காது. ஆனால் பிரச்சனை வரும் நாளில், அது திடீரென்று அல்ல... மெதுவாக, அமைதியாக தான் வரும்.

24
காபி லேப்டாப் ஆபத்து

லேப்டாப்புக்கு திரவ சேதம் ஏற்பட்டால், அது ஒரு பெரிய விபத்தாக தெரியாது. முழுக் கப் கவிழ்வது அரிது. அதற்கு பதிலாக, குளிர்ந்த தண்ணீர் பாட்டில் இருந்து விழும் சிறிய துளிகள், சூடான காபி அல்லது டீயிலிருந்து வரும் ஆவி போன்றவை மெதுவாக லேப்டாப்புக்குள் புகுந்து விடும். இன்றைய லேப்டாப்புகள் மிகவும் மெல்லிய வடிவமைப்பில் இருப்பதால், உள்ளே சென்ற ஈரப்பதம் வெளியேற வழியே கிடைக்காது. அங்குதான் உண்மையான சேதம் ஆரம்பமாகிறது.

34
லேப்டாப் பராமரிப்பு

இந்தப் பிரச்சனையின் ஆபத்து என்னவென்றால், உடனே எந்த அறிகுறியும் தெரியாது. லேப்டாப் நாட்களாக, சில நேரங்களில் வாரங்களாக கூட சாதாரணமாக வேலை செய்யும். ஆனால் அந்த இடைவெளியில், உள்ளே இருக்கும் கனெக்டர்கள், பேட்டரி பகுதிகளில் மெதுவாக துருப்பிடிப்பு (அரிப்பு) உருவாகும். திடீரென்று கீபோர்ட் வேலை செய்யாமல் போவதும், சார்ஜ் பிரச்சனை வருவதும் அதற்குப் பிறகே தெரியும். ஏர்-கண்டிஷன் ரூமில் சூடான பானங்கள் வைத்தால், ஈரப்பதம் உருவாகும் அபாயம் இன்னும் அதிகரிக்கும்.

44
லேப்டாப் டிப்ஸ்

மேசையில் உணவு வைத்திருப்பதும் ஆபத்தையே அதிகரிக்கும். சிறிய துகள்கள் கீபோர்டுக்குள் சிக்கி, ஈரத்தை தக்கவைத்து பிரச்சனையை பெரிதாக்கும். பாதுகாப்பான வழி ரொம்ப சிம்பிள். லேப்டாப் இருக்கும் மேசையில் திரவங்களை வைக்காதீர்கள். முடிந்தால் வேறு மேசை, குறைந்தது மூடியுள்ள பாட்டில். வேலை நடுவில் கீபோர்டைத் தாண்டி குடிக்காதீர்கள். லேப்டாப் எச்சரிக்கை கொடுக்காது. அது அமைதியாக பழுதாகும். ஒரு சாதாரண பழக்கம், தேவையில்லாத பெரிய செலவாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories