தற்போது கூகுள் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. இது பயனர்கள் புதிய கணக்கை உருவாக்காமல் தங்கள் ஜிமெயில் யூசர்நேமை மாற்ற அனுமதிக்கிறது. இந்த மாற்றத்தால் உங்கள் கூகுள் டிரைவ், போட்டோஸ் போன்ற சேவைகளில் உள்ள டேட்டா பாதிக்கப்படாது.
பல ஆண்டுகளாக ஜிமெயில் (Gmail) பயனர்கள் எதிர்கொண்ட ஒரு பெரிய சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்போகிறது. கூகுள் தற்போது, பயனர்களின் பழைய ஜிமெயில் யூசர்நேமை மாற்றிக் கொள்ளும் வசதியை சோதனை அடிப்படையில் உருவாக்கி வருகிறது. இதன் மூலம், புதிய கூகுள் கணக்கு உருவாக்க வேண்டாமலேயே, அதே கணக்கில் புதிய ஜிமெயில் முகவரியை தேர்வு செய்ய முடியும். குறிப்பாக, சிறு வயதில் உருவாக்கிய மெயில் ஐடியை இப்போது மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும்.
24
கூகுள் ஜிமெயில் அப்டேட்
இந்த புதிய அப்டேட், @gmail.com என முடிவடையும் மெயில் முகவரிகளுக்கு மட்டும் பொருந்தும். ஒரே கூகுள் கணக்கில், பழைய ஜிமெயில் ஐடியை மாற்றி, புதிய ஜிமெயில் யூசர்நேமை தேர்வு செய்யலாம். இந்த மாற்றினால் Google Drive, Photos, YouTube, Play Store போன்ற சேவைகளில் உள்ள டேட்டா, வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பழைய மெயில் ஐடி, ரிகவரி மெயிலாக சேமிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு அம்சமும் தொடரும்.
34
ஜிமெயில் ஐடி மாற்றலாம்
இந்த வசதி அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது. கூகுள் கட்டமைப்பாக (கட்டமாக வெளியீடு) இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் Google கணக்கு அமைப்புகள்-ல் ‘தனிப்பட்ட தகவல்’ → ‘Email’ என்ற பகுதியில் இந்த ஆப்ஷன் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். ஒருமுறை மாற்றம் செய்த பிறகு, பழைய ஜிமெயில் ஐடிக்கும் புதிய ஜிமெயில் ஐடிக்கும் வரும் மெயில்கள் ஒரே இன்பாக்ஸிலேயே கிடைக்கும். மேலும், லாகின் செய்யும்போது இரு மெயில் முகவரிகளையும் பயன்படுத்த முடியும்.
ஆனால், சில கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒருமுறை Gmail யூசர்நேம் மாற்றிய பிறகு, அடுத்த மாற்றத்திற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில், பழைய ஐடிக்கு மீண்டும் திரும்பும் வசதி இருக்கும். மேலும், அந்த பழைய ஜிமெயில் ஐடியைப் பயன்படுத்தி புதிய Google கணக்கை உருவாக்க முடியாது. ஒரு Google கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே யூசர்நேம் மாற்ற முடியும். இதன் மூலம், ஒரே கணக்கில் காலப்போக்கில் 4 ஜிமெயில் முகவரிகள் வரை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.