கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் தற்போது Flipkart-ல் ரூ.35,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 120Hz டிஸ்ப்ளே, சிறந்த கேமரா அம்சங்களுடன் வரும் இந்த ஃபிளாக்ஷிப் போன், தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு பயனர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்று கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL). குறிப்பாக, புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் முதலில் கிடைப்பது, கேமரா குவாலிட்டி மற்றும் கிளீன் சாப்ட்வேர் அனுபவம் ஆகிய காரணங்களால் Pixel போன்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான Pixel 9 Pro XL, தனது சக்திவாய்ந்த அம்சங்களால் பெரும் கவனம் பெற்ற நிலையில், தற்போது பெரிய தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
24
பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் தள்ளுபடி
தற்போது Flipkart தளத்தில், Google Pixel 9 Pro XL (16GB RAM + 256GB ஸ்டோரேஜ்) மாடல் ரூ.1,24,999 என்ற பழைய விலையிலிருந்து நேரடியாக ரூ.89,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு சுமார் ரூ.35,000 வரை சேமிப்பு கிடைக்கிறது. இதற்கு மேலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ.4,000 வரை கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். இந்த போன் ஹேசல் மற்றும் பீங்கான் இரண்டு பிரீமியம் நிறங்களில் கிடைக்கிறது.
34
பிக்சல் 9 ப்ரோ அம்சங்கள்
ஸ்பெசிபிகேஷன்கள் விஷயத்தில் Pixel 9 Pro XL ஒரு ஃபிளாக்ஷிப் அனுபவத்தை வழங்குகிறது. இதில் 6.8-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 3000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பு உள்ளது. இந்த போன் Android 14-இல் இயங்கி, 7 ஆண்டுகள் வரை முக்கிய Android அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் உறுதி அளித்துள்ளது. இதன் உள்ளே சக்திவாய்ந்த Google Tensor G4 புராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா அம்சங்களில் Pixel 9 Pro XL தனித்துவமாக திகழ்கிறது. இதில் 50MP மெயின் கேமரா (OIS), 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 48MP அல்ட்ரா-வைட் கேமரா கொண்ட ட்ரிப்பிள் கேமரா செட்அப் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 42MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5060mAh பேட்டரியுடன், 37W வயர்டு மற்றும் 23W வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் இந்த போன் கொண்டுள்ளது. இந்த தள்ளுபடி விலையில், Pixel 9 Pro XL ஒரு சிறந்த டீலில் சந்தேகமே இல்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.