Published : Nov 28, 2023, 06:45 PM ISTUpdated : Nov 28, 2023, 06:58 PM IST
ஏர்டெல் சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் தனது முதல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது. இருந்தாலும், நெட்ஃபிக்ஸ் சந்தாவை வழங்கும் சில போஸ்ட்பெய்ட் திட்டங்களும் உள்ளன. இவை தவிர, ரிலையன்ஸ் ஜியோவும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாவை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.1,199 மாதாந்திர போஸ்ட்பெய்டு திட்டமாம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 150 ஜிபி டேட்டா ஆகியவற்றுடன் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டாவும் கிடைக்கும்.
27
ஏர்டெல் ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 200 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இலவசமாக நெட்பிளிக்ஸ் பேசிக், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும். வரம்பற்ற 5G டேட்டாவும் பெறலாம்.
37
ஏர்டெல் ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டம் நெட்ஃபிக்ஸ் சந்தாவை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 3GB தினசரி டேட்டா, வரம்பற்ற 5ஜி டேட்டா ஆகியவற்றையும் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டமானது வரம்பற்ற அழைப்பு, 100ஜிபி டேட்டா, 3 கூடுதல் சிம் இணைப்புகள், நெட்ஃபிக்ஸ் சந்தா, அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் கூடுதல் 5ஜிபி டேட்டா ஆகியவற்றை வாரி வழங்குகிறது.
57
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 300GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 500GB வரை டேட்டா ரோல்ஓவர், நெட்ஃபிக்ஸ் (மொபைல்) மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆகியவை கிடைக்கும்.
67
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,099 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,099 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவு விலையில் இலவச நெட்பிளிக்ஸ் திட்டமாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டா ஆகியவையும் அடங்கும். வரம்பற்ற 5G டேட்டாவையும் இலவசமாக வழங்குகிறது.
77
ரிலையன்ஸ் ஜியோ ரூ 1,499 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் இந்தத் இந்த திட்டமும் நெட்ஃபிக்ஸ் பேசிக் சந்தாவுடன் வருகிறது. வரம்பற்ற அழைப்பு, 3GB தினசரி டேட்டா, வரம்பற்ற 5G டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் உண்டு.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.