LPG Cylinder Price Hike: இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! புதிய விலை இதுதான்!

Published : Jun 07, 2026, 06:26 AM IST

LPG Cylinder Price Hike: இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சென்னையில் வீட்டு சிலிண்டரின் விலை இப்போது ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது.

PREV
14
வீட்டு சிலிண்டர் விலை உயர்வு

இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.29 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஜூன் 7, 2026) காலை முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
சென்னையில் வீட்டு சிலிண்டர் விலை ரூ.957.50

இந்த அதிரடி உயர்வால் தலைநகர் சென்னையில் இதுவரை ரூ.928.50-க்கு விற்கப்பட்டு வந்த வீட்டு சிலிண்டரின் விலை, இப்போது ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.913-ல் இருந்து ரூ.942 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாத காலத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகே பெட்ரோல், டீசல் விலை மற்றும் வணிக மற்றும் வீட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

34
சிஎன்ஜி விலையும் உயர்வு

தற்போது மீண்டும் வீட்டு சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது குடும்பத் தலைவிகளிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடந்த மே மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகளில் பல மடங்கு உயர்த்தப்பட்டு, சென்னையில் தற்போது ரூ.3,283 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சிலின்டர் விலை மட்டும்ன்றி வாகன எரிபொருளான சிஎன்ஜி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

44
அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி இறக்குமதி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பை ஈடுகட்டவே இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி கேஸ் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தற்போது அத்தியாவசியத் தேவையான சமையல் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால், வரும் நாட்களில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories