Laptop Cleaning Tips : லேப்டாப் ஸ்கிரீனில் தூசி, கைரேகை படிவது சாதாரணம் தான். ஆனால் அதை தவறான முறையில் சுத்தம் செய்வது டிஸ்ப்ளே கோட்டிங்கை பாதித்து, நிரந்தர சேதத்தையும் ஏற்படுத்தலாம்.
லேப்டாப் இன்று வேலை, படிப்பு மற்றும் பொழுதுபோக்கின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஆனால் தினசரி பயன்பாட்டில் அதிகம் கவனிக்கப்படாத பகுதி அதன் ஸ்கிரீன். தூசி, கைரேகை மற்றும் சிறிய கறைகள் படிவது சாதாரண விஷயமாக இருந்தாலும், அவற்றை தவறான முறையில் சுத்தம் செய்வது டிஸ்ப்ளேவுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஸ்கிரீனை சுத்தம் செய்யும் முன் முதலில் லேப்டாப்பை முழுமையாக ஷட் டவுன் செய்வது அவசியம்.
24
மைக்ரோஃபைபர் துணி
சார்ஜரையும் கழற்றினால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். கறுப்பு நிறத்தில் இருக்கும் ஸ்கிரீனில் தூசி மற்றும் கறைகள் தெளிவாக தெரியும் என்பதால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். ஸ்கிரீன் பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் சரியான துணி தேர்வு. மைக்ரோஃபைபர் துணி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டிஷ்யூ பேப்பர், பழைய துணி அல்லது கைக்குட்டை போன்றவை ஸ்கிரீனின் மேற்பரப்பில் நுண் கீறல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
34
ஸ்கிரீன் கிளீனிங்
மற்றொரு பொதுவான தவறு, தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விடை நேரடியாக ஸ்கிரீனில் தெளிப்பது. இப்படி செய்யும்போது திரவம் ஓரங்கள் வழியாக உள்ளே சென்று டிஸ்ப்ளே அல்லது மின்சார பாகங்களை சேதப்படுத்தலாம். அவசியமெனில், மைக்ரோஃபைபர் துணியில் லேசாக நனைத்து மெதுவாக துடைப்பதே பாதுகாப்பான நடைமுறை.
ஸ்கிரீனில் கறைகள் பிடிவாதமாக இருந்தாலும் அதிக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். வட்ட இயக்கத்தில் மெதுவாக துடைப்பது சிறந்தது. மேலும் அமோனியா, ப்ளீச் அல்லது வீரியமான கெமிக்கல்கள் கொண்ட கிளீனர்களும் ஆன்டி-கிளேர் கோட்டிங்கை சேதப்படுத்தக்கூடும். சரியான பராமரிப்பு இருந்தால், லேப்டாப் ஸ்கிரீன் நீண்ட காலம் புதிதாக ஜொலிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.