BSNL: வெறும் ரூ.51-க்கு 28 நாட்கள் வேலிடிட்டி! டேட்டா + கால்ஸ்! பிஎஸ்என்எல் பம்பர் ஆஃபர்!

Published : May 31, 2026, 04:48 PM IST

BSNL: பிஎஸ்என்எல் வெறும் 51 ரூபாய்க்கு 28 நாள் வேலிடிட்டி வழங்கும் சூப்பர் பிளானை கொண்டு வந்துள்ளது. இந்த பிளானின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
பிஎஸ்என்எல்லின் ரூ.51 பிளான்

இந்தியாவில் மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (பிஎஸ்என்எல்) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் வெறும் 51 ரூபாய்க்கு மிகவும் விலை குறைவான மலிவு விலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

24
ரூ.51 பிளானில் என்னென்ன சிறப்பம்சங்கள்?

அதாவது இந்த ரூ.51 பிளான் 28 நாள் வேலிடிட்டி கொண்ட மிக மலிவான திட்டம் ஆகும். இந்த பிளானில் தினமும் 2GB டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ்கள் இலவசமாக கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் கால்ஸ் வசதியும் இதில் உண்டு. ஆனால் இந்த பிளானை ரீசார்ஜ் செய்ய நிபந்தனை உள்ளது. அது என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரூ.51 ஸ்மார்ட் ஸ்டார்ட் (Smart Start) திட்டத்தை தங்களது நெட்வொர்க்கிற்கு வரும் புதிய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே (New Users Only) பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

34
இந்த பிளானின் நிபந்தனை இதுதான்

நீங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், உங்களது தற்போதைய எண்ணிற்கு இந்த ரூ. 51 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியாது. புதிய சிம் கார்டு வாங்குபவர்கள் அல்லது வேறு நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறுபவர்கள் (MNP) மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும். இந்த சலுகையின் கீழ், நீங்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் (BSNL CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் (Retailers) செல்லும் போது, உங்களுக்கு சிம் கார்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். நீங்கள் வெறும் ரூ.51 மட்டும் செலுத்தினால் மட்டும் போதுமானது.

44
பிஎஸ்என்எல் ரூ.599 பிளான்

இது தவிர நீண்ட வேலிடிட்டி, அதிக டேட்டா தேவைப்படுகிறவர்களுக்கு பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக 70 நாட்கள் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 3GB அதிவேக டேட்டா வீதம் 70 நாட்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 210GB டேட்டா உங்களுக்கு கிடைக்கும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும், OTT தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பதற்கும், ஆன்லைன் கேம்கள் விளையாடுவதற்கும் இந்த டேட்டா தாராளமாகப் போதுமானதாகும்.

மேலும் நாடு முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற (Unlimited) இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) அனுப்பும் வசதி 70 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் எங்கு பயணித்தாலும் இலவச தேசிய ரோமிங் வசதியும் இதில் அடங்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories