ஜியோ vs ஏர்டெல்: ரூ.500க்குள் கிடைக்கும் பெஸ்ட் பிளான்கள் என்னென்ன? முழு விவரம்!

Published : Jan 17, 2025, 01:20 PM ISTUpdated : Jan 17, 2025, 01:21 PM IST

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களில் ரூ.500க்குள் கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். 

PREV
16
ஜியோ vs ஏர்டெல்: ரூ.500க்குள் கிடைக்கும் பெஸ்ட் பிளான்கள் என்னென்ன? முழு விவரம்!
Reliance Jio vs Airtel

ரிலையன்ஸ் ஜியோ-ஏர்டெல் 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ 49 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 38 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் பல்வேறு மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நிறுவனங்களும் செயல்படுத்தி வரும் ரூ.500க்குள் அடங்கும் ரீசார்ஜ் பிளான்கள் குறித்து பார்க்கலாம். 
 

26
JIO Under 500 Plans

ஜியோ ரூ.399 பிளான் 

இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் கால்ஸ் உண்டு. மேலும் ஜியோ கிளவுட் அழைப்பு, ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா அனைத்தும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் இலவசமாக கிடைக்கும். 

ஜியோ ரூ.449 பிளான் 

அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிளான் மிகவும் சிறப்பான ஒன்றாகும். இது 28 நாட்கள் வேலிட்டி வழங்குகிறது. தினமும் 3GB டேட்டா கிடைக்கும். மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா சந்தா கிடைக்கும். அன்லிமிடெட் கால்ஸ் வசதி உண்டு. 

பிஎஸ்என்எல் செம பிளான்; வெறும் 3 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டா; 365 நாள் வேலிட்டி; சூப்பர் ஆபர்!
 

36
JIO Best Plans

ஜியோ ரூ.448 பிளான் 

பொழுதுபோக்கு மற்றும் டேட்டா பேக்குகளை தேடுபவர்களுக்கு சிறந்த பிளான் இதுவாகும். இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோ சினிமா பிரீமியம், ஜியோ டிவி சந்தா கிடைக்கும். மேலும் Sony Liv, Zee5 மற்றும் Sun NXT போன்ற 12 OTT பயன்பாடுகளுக்கான இலவச சந்தாக்களை பெறலாம்.

46
Airtel Under 500 Plans

ஏர்டெல் ரூ.489 பிளான் 

அதிக வேலிடிட்டி மற்றும் மொத்த டேட்டா தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற பிளான் இதுவாகும். இந்த பிளான்படி மொத்தமாக 6ஜிபி டேட்டா கிடைக்கும். 77 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. உள்ளூ மற்றும் ரோமிங் அன்லிமிடெட் கால் வசதி கிடைக்கும். 

ஏர்டெல் ரூ.449 பிளான்

அதிவேக இணையத்தை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த பிளான் இது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். மேலும் ஏர்டெல் ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் மூலம் 22 OTT பயன்பாடுகளுக்கான சந்தா இலவசமாக பெறலாம். அன்லிமிடெட் கால்ஸ் வசதி உண்டு.
 

56
Airtel Best Plans

ஏர்டெல் ரூ.429 பிளான் 

இந்த திட்டம் 1 மாதம் வேலிடிட்டி கொண்டது. ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா கிடைக்கும். 5ஜி இணையத்தை அன்லிமிடெட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.355 பிளான் 

குறைந்த வேலிடிட்டி மற்றும் மிதமான டேட்டாவைத் தேடுபவர்களுக்கு இந்த திட்டம் சரியானது. இந்த திட்டத்தின்படி 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மொத்தமாக 25ஜிபி டேட்டா வழங்கப்படும். அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இலவச எஸ்எம்எஸ்கள் வசதி கிடைக்கும். 

அட! ஸ்மார்ட்போனில் இந்த வசதிகளும் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!


 

66
Best Plans Under Rs.500

உங்களுக்கு எந்த பிளான் பெஸ்ட்?

அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.449 பிளான்கள் சிறந்த தேர்வுகளாகும்.  நீண்ட வேலிட்டி தேடுபவர்களுக்கு ஏர்டெல்லின் ரூ.489 தொகுப்பு ஒரு அற்புதமான பிளானாகும். நீங்கள் OTT சந்தாக்களை விரும்பினால் ஜியோ ரூ.448 பிளானை செலக்ட் செய்து கொள்ளலாம். 

 

Read more Photos on
click me!

Recommended Stories