BSNL
பிஎஸ்என்எல்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதாந்திர, வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் சலுகையை வழங்கினாலும் அண்மை காலமாக கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள்அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் கொண்டு வர ரெடியாக உள்ளது. பல்வேறு இடங்களில் 4ஜி சேவைக்கான டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
BSNL Budget Recharge Plans
பிஎஸ்என்எல் 365 நாள் திட்டம்
இதனால் பிஎஸ்என்எல் செல்வாக்கு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிஎஸ்என்எல்லின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
இந்த சிக்கனமான பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.1,198 ஆகும். இந்த திட்டத்தின்படி 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் கால்கள் செய்யும் வசதியும் உள்ளது. இதில் உள்ளூர் கால்ஸ் மற்றும் ரோமிங் கால்ஸ்களும் அடங்கும்.
மேலும் ஒவ்வொரு மாதமும் 3 ஜிபி டேட்டா மற்றும் 30 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தை தினசரிபடி கணக்கு பார்த்தால் தினமும் ரூ.3.28 செலவில் நீங்கள் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதியை பெறுவீர்கள்.
BSNL Best Plans
பிஎஸ்என்எல் 425 நாள் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.2,399 விலையில் 425 நாள் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலில் 395 நாட்கள் வேலிடிட்டி இருந்த நிலையில், இப்போது வேலிடிட்டி கூடுதலாக நீட்டிக்கப்பட்டு 425 நாள் வேலிடிட்டி பெறலாம்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் வசதி வழங்க்கப்படுகிறது. மேலும் தினசரி 2 ஜிபி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். மொத்தமாக நீங்கள் 850 ஜிபி அதிவேக டேட்டாவை பெற முடியும். டேட்டா முடிவடைந்தாலும் குறைந்த வேகத்தில் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
BSNL 4G Service
4ஜி இணைய சேவை டவர்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை கொண்டு வரும் பணியை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அதாவது 3 ஜி டவர்களை படிப்படியாக நீக்கி, மிகவும் மேம்பட்ட 4 ஜி நெட்வொர்க்கிற்கு மாறத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 4ஜி சேவை இணைப்பை மேம்படுத்த, 1,00,000 புதிய 4 ஜி டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
4ஜி சேவை கொண்டு வருவதற்காக ஜனவரி 15 முதல் பிஎஸ்என்எல் 3ஜி சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது. 3ஜி சேவை நிறுத்தப்படுவது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும். ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் தனது 4G சேவையை பான் இந்தியா அளவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.