அட! ஸ்மார்ட்போனில் இந்த வசதிகளும் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

First Published | Jan 17, 2025, 9:51 AM IST

அனைவரும் இன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போன்களில் நமக்கே தெரியாமல் பல விஷயங்கள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் விரிவாக காணலாம். 

Smartphone Features

ஸ்மார்ட்போன்களின் முக்கியத்துவம் 

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஸ்மார்ட்போன்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. உலகின் எந்த ஒரு மூலையில் எந்த விஷயங்கள் நடந்தாலும் ஸ்மார்ட்போன்கள் வாயிலாக எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. 

கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லாமல், ஒரு போன் இருந்தால் அதன் மூலம் அனைத்து வேலைகளையும் எளிதாக செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் நமக்கே தெரியாமல் நமது ஸ்மார்ட்போனில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

Split Screen

பிளவுத் திரை

நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவற்றில் பிளவுத் திரை split screenஎன்ற அற்புதமான செயல்பாடு உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. பிளவுத் திரை அம்சம் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய உதவுகிறது. இது ஒரே நேரத்தில் இரண்டு திரைகளில் திறந்து காட்டுகிறது. 

இரண்டையும் நீங்கள் ஒரே நேரத்தில் இயக்கலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கும் இருக்கும். சில செயலிகள் மட்டும் இந்த அம்சத்தை ஆதரிக்காது. நீங்கள் பிளவு செய்ய விரும்பும் செயலியைத் திறந்து, மெனுவில் 'பிளவுத் திரை' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்‌ஷனில் சூப்பர் வசதி! உடனே அப்டேட் பண்ணுங்க!

Tap to resize

Secure Folder

பாதுகாப்பு போல்டர் (Secure Folder)

சாம்சங் கேலக்ஸி (samsung galaxy) ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பாதுகாப்பான கோப்புறை (Secure Folder) விருப்பம் உதவியாக இருக்கும். இது தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், செயலிகளை மறைத்து வைக்க உதவுகிறது. இந்தக் கோப்புறை மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இந்த கோப்புகளை திறக்க PIN, பாஸ்போர்ட் அல்லது பயோமெட்ரிக் உள்நுழைவு அவசியமாகும். 

Documents Scanner

ஆவணங்கள் ஸ்கேனர் (Documents Scanner)

நீங்கள் ஏதேனும் ஆவணங்களை ஸ்கேன் செய்ய மூன்றாம் தரப்பு செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவீர்கள். ஆனால் நீங்கள் ஐபோன் பயன்படுத்தினால், நேரடியாக நோட்ஸ் செயலியிலிருந்து ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம். இது ஐபோன் உள்ளவர்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும்.

புதிய குறிப்பைத் திறந்து, கேமரா பொத்தானைக் கிளிக் செய்து ஸ்கேன் ஆவணங்கள் (Scan Document)  விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்குகிறதா? பரபரப்பை பற்ற வைத்த கார்ட்டூன்! உண்மை என்ன?
 

UI Tuner

UI டியூனர்

ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் வைத்திருக்கும் அனைவரும் இந்த அம்சத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். UI டியூனர் அம்சத்தால் உங்கள் போனை வேகமாகப் பயன்படுத்த முடியும். இது ஒரு சிறப்பு மெனுவை உருவாக்க உதவும் ஷார்ட் கட் விருப்பம்.

இதில் நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைக்கலாம். கடிகாரம், குறிப்புப் பட்டியல், முக்கியமான அமைப்புகள் போன்ற சில விருப்பங்களை அதில் வைத்துக் கொள்ளலாம். 

Latest Videos

click me!