ரூ.3,000க்குள் சூப்பர் ஸ்மார்ட்வாட்ச்கள்; எக்கச்சக்க அம்சங்கள்; ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை!

First Published | Jan 16, 2025, 9:48 AM IST

ப்ளிப்கார்ட்டில் நடந்து வரும் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

Flipkart Republic Day Sale

குடியரசு தின சிறப்பு விற்பனை

பிளிப்கார்ட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. ஜனவரி 19 வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையில் செல்போன்களுக்கு மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் பெரிய அளவில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. Noise, Fastrack போன்ற பிரபலமான பிராண்டுகளில் ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ.3,000க்குள் கிடைக்கின்றன. 
 

Fastrack Smartwatch

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்வாட்ச் 

ஃபாஸ்ட்ராக் ரிவோல்ட் FS1 (Fastrack Revoltt FS1 Pro) மாடல் ஸ்மார்ட்வாட்ச்சை ப்ளிப்கார்ட்டில் குடியரசு தின சிறப்பு விற்பனையில் வெறும் ரூ.1799க்குக் வாங்கிக் கொள்ள முடியும். இந்த வாட்ச்சில் 1.96 இன்ச் Super AMOLED வளைந்த டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 410 x 502 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் Always On Display வசதியுடன் உள்ளது. Android சாதனங்களுக்கான காலிங் இணைப்பு மற்றும் SingleSync Bluetooth கனெக்ட் செய்ய முடியும். 

பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் 10 நிமிடம் சார்ஜ் போட்டால் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும். அதிகபட்சமாக 7 நாட்கள் பேட்டரி ஆயுள் கிடைக்கும். மேலும் 200-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள், 110 கேம் மோட்கள், AI குரல் உதவியாளர் மற்றும் வானிலை அப்டேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. 
 

Tap to resize

Redmi Smartwatch

ரெட்மி வாட்ச் 3

ப்ளிப்கார்ட் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரெட்மி வாட்ச் 3 (Redmi Watch 3) மாடல் ரூ.1,899க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சில் 1.83 இன்ச் டிஸ்பிளே 450 நிட்ஸ் பிரைட்னஸுடன் கொடுக்கப்பட்டுள்ளது. Mi Fitness செயலியின் உதவியுடன், பயனர்கள் SOS அம்சத்தை பயன்படுத்தலாம். இது பக்க பொத்தானை மூன்று முறை அழுத்துவதன் மூலம் அவசரத் தொடர்பை அழைக்க உதவுகிறது. 

மேம்பட்ட இணைப்பு மற்றும் அழைப்புத் திறன்களுக்காக இது Bluetooth v5.3 (BLE) ஐயும் ஆதரிக்கிறது. 200க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கக்கூடிய வாட்ச் பேஸ்கள், இதயத் துடிப்பு மானிட்டர், SpO2, மன அழுத்த நிலைகள், தூக்க முறைகள் மற்றும் மாதவிடாய் சுழற்சிகள் கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த வாட்ச் 12 நாட்கள் பேட்டரி பேக் ஆயுளை கொண்டுள்ளது.

Boult Smartwatch

போல்ட் கிரவுன்ஆர் ப்ரோ

போல்ட் கிரவுன்ஆர் ப்ரோ (Boult CrownR Pro) மாடல் ஸ்மார்ட்வாட்ச் ரூ.1999க்குக் கிடைக்கிறது. இந்த மாடலில் 1.43 இன்ச் AMOLED HD திரை Always On டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. SpO2 இரத்த ஆக்ஸிஜன் செறிவு கண்காணிப்பு, 24/7 இதயத் துடிப்பு கண்காணிப்பு மற்றும் பெண் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு போன்ற சிறப்பான அம்சங்களை பெற்றுள்ளது. 

மேலும் 150க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள்,  120க்கும் மேற்பட்ட கேம் மோட்கள், SMS மற்றும் சமூக செயலி அறிவிப்புகள், "எனது தொலைபேசியைக் கண்டுபிடி" அம்சம், AI குரல் உதவியாளர் மற்றும் வானிலை அப்டேட் என எக்கச்சக்க அம்சங்களை கொண்டுள்ளன. 

Noise Smartwatch

நாய்ஸ் விஷன் 3

ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.7,999 விலை கொண்ட நாய்ஸ் விஷன் 3 (Noise Vision 3) ஸ்மார்ட்வாட்ச்சை இப்போது ரூ.2,199க்கு வாங்கிக் கொள்ள முடியும். இந்த வாட்ச்சில் 410 x 502 பிக்சல் தெளிவுத்திறனுடன் மெல்லிய bezel மற்றும் 1.96 இன்ச் AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.  இது ஒரு செவ்வக dial மற்றும் உலோக சட்டகம் கொண்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அமைந்துள்ளது. 

இந்த வாட்ச் iOS மற்றும் Android இயக்க முறைமைகளுடன் செயல்படுகிறது. மேலும் accelerometer, SpO2 டிராக்கர் மற்றும் இதயத் துடிப்பு மானிட்டர் உள்ளிட்ட சென்சார்களைக் கொண்டுள்ளது, மேலும் இது நீர் எதிர்ப்புத் தன்மை கொண்டது. இந்த வாட்ச் முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாள் பேக் அப் கொடுக்கிறது. மேலும் இதயத் துடிப்பு கண்காணிப்பு, ஸ்டெப் கவுண்ட் மற்றும் கலோரி கவுண்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

Nothing Smartwatch

நத்திங் வாட்ச் ப்ரோ

நத்திங் வாட்ச் ப்ரோ (Nothing Watch Pro) மாடலை இப்போது ரூ.2499க்கு வாங்கிக் கொள்ள முடியும். இந்த வாட்ச்சில் உள்ள 1.9 -இன்ச் AMOLEDடிஸ்பிளே மிகப் பெரியது. 600 நிட்ஸ் பிரைட்னைஸ் கொண்டுள்ளது. இது சிறந்த இருப்பிடக் கண்காணிப்புக்கான 5சேட்டிலைட் பொசிஷனிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது மற்றும் AI இரைச்சல் குறைப்புடன் Bluetooth அழைப்பை இயக்குகிறது.

இதயத் துடிப்பு, SpO2, தூக்கம் மற்றும் மன அழுத்தக் கண்காணிப்பு போன்ற உடல்நலக் கண்காணிப்பு திறன்களுடன், இது 110 விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாட்ச்போன் திறன்கள் அனைத்தும் உள்ளது. இந்த வாட்ச் 10 நாட்கள் பேட்டரி பேக் கொண்டுள்ளது.

Latest Videos

click me!