iPhone 15 from Apple Store
ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைலை ஆர்டர் செய்த ஒருவருக்கு ஒரு டம்மி மொபைல் டெலிவரி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய ஐபோனை ஆர்டர் செய்தவருக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
iPhone 15 Pro Max
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் Reddit தளத்தில் புகாரை முன்வைத்து புலம்பி இருக்கிறார். ஆன்லைனில் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நேரடியாக எதையும் ஆர்டர் செய்வதற்கு திட்டமிட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கையாக அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து மொபைல் டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக ஈமெயில் வந்திருப்பதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
iPhone 15 fake phone
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் பார்சலைத் திறந்தவுடன் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்துள்ளார். மொபைலின் ஏற்கெனவே ஸ்கிரீன் ப்ரொடெக்டர் ஒட்டப்பட்டிருப்பதை முதலில் கவனித்துள்ளார். பார்த்தவுடன் இது OLED ஸ்கிரீன் இல்லை என்று தெரிந்துவிட்டது.
iPhone delivery fraud
மொபைலை ஆன் செய்த பிறகு கிடைத்திருப்பது ஐபோன் அல்ல என்பதை உணர்ந்துள்ளார். மொபைலில் டிக்டாக், பேஸ்புக், யூடியூப் போன்ற அப்ளிகேஷன்கள் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கிடைத்துள்ளது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அல்ல என்று தெரிந்துவிட்டால், தனது ஆப்பிள் ஐடியை அதில் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டார்.
iPhone delivery scam
இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் விரைவில் அனுப்பப்பட்ட டம்மி மொபைலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரிஜினல் ஐபோன் 15 மொபைலை அனுப்புவதாக உறுதி அளித்துள்ளது.