செல் போன்.. பேட்டரி லைப் நல்லா இருக்கணுமா? அப்போ இத்தனை சதவிகிதம் தான் சார்ஜ் செய்யணுமாம் - பலர் அறியாத தகவல்!

First Published | Nov 14, 2023, 1:17 PM IST

Phone Battery : ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட செல்போன்கள் என்று அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டன. செல்போன் இல்லாத நபர்களை காணவே முடியாது என்கின்ற நிலை தற்பொழுது வந்துவிட்டது. ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா? என்று கேட்டால் அது சந்தேகமே.

cell phone charging

பொதுவாக செல்போன்களை பயன்படுத்தும் பலரிடம் இருக்கும் பொதுவான ஒரு குற்றச்சாட்டு பேட்டரி தீர்வது தான். ஆகவே அந்த பேட்டரியின் அளவை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நீங்கள் உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு முன்னதாக அவை ஏறக்குறைய முற்றிலும் தீர்ந்து விட வேண்டும், அப்படி செய்ய தவறினால் நவீன லித்தியம் அயன் பேட்டரிகள் பெரிய அளவில் சேதம் அடையலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

வாட்ஸ்அப்பில் சீக்ரெட் கோடு அம்சம் அறிமுகம்! லாக் செய்த உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

Charging

பேட்டரி 50 சதவிகிதம் சார்ஜ் இருக்கும்போதே சார்ஜ் செய்யாமல் 15 சதவிகிதம் அல்லது அதற்கும் கீழ் இறங்கும்போது சார்ஜ் செய்துகொள்ளல்லாம். மேலும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யாமல் 80 முதல் 90% வரை சார்ஜ் செய்து பயன்படுத்தி பின்பு 15 சதவீதத்திற்கும் கீழே சென்ற பின் அதை மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தினால் அது அதிக காலம் உழைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Tap to resize

Charging Phone

அதேபோல தற்பொழுது சந்தையில் கிடைக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் முறைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமாம், காரணம் 0-வில் இருந்து சட்டென்று உங்கள் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்யும் பொழுது அது உங்களுடைய செல்போன் பேட்டரியை பெரிய அளவில் சேதப்படுத்தலாம். ஆகவே பாஸ்ட் சார்ஜிங் முறைகளை பயன்படுத்தும் பொழுது சரியான முறையில் அவற்றை பயன்படுத்த நிபுணர்கள் ஊக்குவிக்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

click me!