ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக மாறுகிறதா பிஎஸ்என்எல்? கிராமங்கள் தோறும் இனி இன்டர்நெட் புரட்சி! வெளியான அதிரடி அறிவிப்பு!

Published : Feb 03, 2026, 06:30 AM IST

BSNL பட்ஜெட் 2026-ல் தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.73,990 கோடி ஒதுக்கீடு! பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் பாரத்நெட் திட்டங்களுக்கு கிடைத்த மெகா நிதி பற்றி இங்கே அறியுங்கள்.

PREV
15
BSNL தொலைத்தொடர்புத் துறைக்கு ஜாக்பாட் அறிவிப்பு

மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தொலைத்தொடர்புத் துறைக்கு (Telecom Sector) மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தத் துறைக்கு மொத்தம் ரூ. 73,990 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

25
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு புத்துயிர்

அரசுத் துறையைச் சார்ந்த பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை மீண்டும் லாபப் பாதைக்குக் கொண்டு வருவதே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது. தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல்-ஐ வளர்த்தெடுக்க, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு, நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அதிக நிதி செலவிடப்பட உள்ளது. "பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் மூன்று முக்கிய பிரிவுகளிலும் உயர்ந்துள்ளது, இனி அசுர வளர்ச்சிதான்" எனத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

35
பாரத்நெட் (BharatNet) திட்டத்திற்கு முன்னுரிமை

கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணைய வசதியைக் கொண்டு செல்லும் 'பாரத்நெட்' திட்டத்திற்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இணைய சேவையை விரிவுபடுத்துவதே இதன் இலக்கு. இதற்காகவும், புதிய டவர்கள் அமைப்பது, பேட்டரி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

45
வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம்

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் 50 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ. 4,495 கோடியாக இருந்த நிதி, இம்முறை ரூ. 6,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் நகரமயமாக்கல் திட்டங்களுக்கு இந்த நிதி பெரிதும் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

55
வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்?

அரசின் இந்த அதிரடி முதலீட்டின் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேலும் தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) ரூ. 90-லிருந்து ரூ. 99-ஆக உயர்ந்துள்ளது. விரைவில் இது மூன்று இலக்கத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான விலையில் தரமான சேவை கிடைப்பதால் சாமானிய மக்கள் பயனடைவார்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories