Instagram இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி மொழி தடையே இல்லை! தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் ஆடியோவை மொழிபெயர்க்கும் புதிய 'Meta AI' வசதி அறிமுகம். லிப்-சிங்க் (Lip-sync) தொழில்நுட்பம் மற்றும் புதிய ஃபான்ட்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
"எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலம் புரியாது" என்று இனி யாரும் ரீல்ஸை (Reels) ஸ்க்ரோல் செய்து தள்ள வேண்டாம். மெட்டா (Meta) கொண்டு வந்துள்ள புதிய தொழில்நுட்பம், கிரியேட்டர்களின் குரலை உங்கள் தாய்மொழியில் ஒலிக்கச் செய்யப் போகிறது!
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், மொழிப் பிரச்சனையால் பல நல்ல கன்டென்ட் (Content) மக்களைச் சென்றடைவதில்லை. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
25
என்ன அது புதிய வசதி?
மெட்டா நிறுவனம் தனது 'AI Reel Translation' சேவையை இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய 5 இந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்த இந்த வசதி, இப்போது பிராந்திய மொழிகளிலும் கிடைப்பதால், ஒரு தமிழர் பேசும் வீடியோவை ஒரு வங்காளியாலும், ஒரு ஹிந்திக்காரர் பேசும் வீடியோவை ஒரு தமிழராலும் அவரவர் மொழியிலேயே கேட்டு ரசிக்க முடியும்.
35
குரல் மாறாது... ஆனால் மொழி மாறும்!
பொதுவாக டப்பிங் (Dubbing) செய்தால் குரல் மாறிவிடும். ஆனால், மெட்டாவின் இந்தத் தொழில்நுட்பம் மிகவும் வித்தியாசமானது:
• அசல் குரல் (Original Tone): கிரியேட்டரின் குரல் வளம் மற்றும் ஏற்ற இறக்கங்கள் மாறாமலேயே, AI அந்தப் பேச்சைத் தமிழுக்கு மாற்றும்.
• லிப்-சிங்க் (Lip-Sync): இதுதான் ஹைலைட்! வீடியோவில் பேசுபவரின் உதடு அசைவுக்கு (Lip movement) ஏற்றவாறு, மொழிபெயர்க்கப்பட்ட ஆடியோவை AI மிகத் துல்லியமாகப் பொருத்தும். இதனால் அவர் உண்மையிலேயே தமிழில் பேசுவது போலவே இருக்கும்.
• பரந்த வீச்சு: ஒரு தமிழ் கிரியேட்டர் போடும் வீடியோவை இனி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடியும்.
• எடிட்டிங் கருவி: இன்ஸ்டாகிராம் எடிட்டிங் டூலில் (Instagram Edits) இனி தேவநாகரி மற்றும் பெங்காலி-அஸ்ஸாமி எழுத்துருக்களும் (Fonts) சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகள் (Third-party apps) இல்லாமலேயே வீடியோக்களில் நேரடியாகத் தாய்மொழியில் டைப் செய்யலாம்.
55
பார்வையாளர்களின் கையில் ரிமோட்
"எனக்கு டப்பிங் வேண்டாம், ஒரிஜினல் வீடியோதான் வேண்டும்" என்று நினைப்பவர்களுக்கும் மெட்டா வழிவகை செய்துள்ளது.
• எல்லா மொழிபெயர்க்கப்பட்ட வீடியோக்களிலும் 'Translated with Meta AI' என்ற லேபிள் இருக்கும்.
• செட்டிங்ஸில் 'Don't translate' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால், அசல் வீடியோவைப் பார்க்கலாம்.
இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்குப் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மொழி என்ற சுவரை உடைத்து, மக்களை இணைக்கும் மெட்டாவின் இந்த முயற்சி சோஷியல் மீடியா உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.