மொபைல் வாங்க ரெடியா? அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு வேட்டை ஆரம்பம்!

Published : Jan 17, 2026, 01:25 PM IST

Amazon அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான 'கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026' விற்பனை தொடங்கியது. iPhone 17 Pro, iPhone 15, Samsung Galaxy A55 மற்றும் OnePlus மொபைல்களுக்கான விலை குறைப்பு விவரங்களை இங்கே காணுங்கள்.

PREV
16
Amazon

புதிய வருடம் பிறந்த கையோடு, மொபைல் போன் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் வந்திருக்கிறது அமேசான். குடியரசு தினத்தை முன்னிட்டு 'Great Republic Day Sale 2026' விற்பனையை அமேசான் தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் பண்டிகைக் காலங்களைப் போலவே, குடியரசு தின விற்பனையும் ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான அமேசான் குடியரசு தின விற்பனை தற்போது பிரைம் உறுப்பினர்களுக்கு (Prime Members) பிரத்யேகமாகத் தொடங்கியுள்ளது.

ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus) எனப் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இதுவரை இல்லாத அளவு குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

26
ஆப்பிள் (Apple) ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

வழக்கம் போல, இந்த விற்பனையில் அதிக கவனம் ஈர்த்திருப்பது ஐபோன் சலுகைகள்தான்.

• iPhone 15 (128GB): இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த மாடலாக இருந்தாலும், இன்றும் மவுசு குறையாத ஐபோன் 15, வெறும் ₹51,499 விலையில் கிடைக்கிறது. இது மிகச்சிறந்த பட்ஜெட் ஐபோன் டீல் ஆகும்.

• iPhone 17 Pro & Max: லேட்டஸ்ட் வரவான ஐபோன் 17 ப்ரோ (256GB) ₹1,34,900 விலையிலும், டாப் எண்ட் மாடலான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ₹1,49,900 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

• iPhone Air: மெல்லிய வடிவமைப்பைக் கொண்ட புதிய 'ஐபோன் ஏர்' (iPhone Air) ₹95,499 விலையில் கிடைக்கிறது.

36
சாம்சங் (Samsung) - பட்ஜெட் முதல் பிரீமியம் வரை!

ஆண்ட்ராய்டு உலகின் ராஜாவான சாம்சங், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற சலுகைகளை வழங்கியுள்ளது.

• Galaxy A55 5G: ஒரு சிறந்த மிட்-ரேஞ்சு போனான இது, வெறும் ₹23,998 விலையில் கிடைக்கிறது.

• Galaxy M17 5G: குறைந்த விலையில் 5G அனுபவம் வேண்டுமா? அப்போ இந்த போன் தான் பெஸ்ட் சாய்ஸ். விலை வெறும் ₹12,999.

ஒன்பிளஸ் (OnePlus) & ரெட்மி (Redmi) அதிரடி!

வேகம் மற்றும் செயல்திறனுக்குப் பெயர்போன ஒன்பிளஸ் நிறுவனமும் சளைத்ததல்ல.

• OnePlus 15R (12GB/256GB): கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் செய்ய ஏற்ற இந்த போன் ₹47,998 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

• OnePlus 13s: முந்தைய ஃபிளாக்ஷிப் கில்லரான இது ₹52,999 விலையில் கிடைக்கிறது.

46
ரெட்மி சலுகைகள்:

• Redmi 13 5G: பட்ஜெட் ராஜா என அழைக்கப்படும் ரெட்மியின் இந்த 5ஜி போன் ₹12,499-க்கு கிடைக்கிறது.

• Redmi Note 13 Pro+: கேமரா பிரியர்களுக்கான இந்த போன் ₹26,999 விலையில் கிடைக்கிறது.

56
டைசன் (Dyson) தயாரிப்புகளுக்கும் தள்ளுபடி!

ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், டைசன் நிறுவனத்தின் பிரீமியம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

• Dyson Supersonic Hair Dryer: 33% தள்ளுபடியில் ₹24,723.

• Dyson Headphones: 50% தள்ளுபடியில் ₹24,900.

66
புதிய கேட்ஜெட்

நீங்கள் பழைய போனை மாற்ற நினைத்திருந்தாலோ அல்லது புதிய கேட்ஜெட்களை வாங்கத் திட்டமிட்டிருந்தாலோ, இதுதான் மிகச் சரியான தருணம். பிரைம் உறுப்பினர்களுக்கு இப்போதே இந்தச் சலுகைகள் கிடைப்பதால், ஸ்டாக் (Stock) முடிவதற்குள் முந்துவது புத்திசாலித்தனம். பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு விரைவில் இந்த விற்பனை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories