4G, VoLTE, VoWiFi, ஹாட்ஸ்பாட் மோடு, NFC, டூயல் SIM, eSIM என அனைத்து நவீன வசதிகளும் இதில் உள்ளன. Qualcomm QCM2290 பிராசஸரில் இயங்கும் இது, நிறுவனங்களுக்கு ஏற்ற கஸ்டம் OS–யுடன் வருகிறது. அதேசமயம், Mobile Device Management (MDM) ஆதரவு வழங்கப்படுவதால், பெரிய குழுக்களுக்கான பாதுகாப்பான deployment எளிதாக செய்ய முடியும். Zello, Threema, OsmAnd, Lyfo, SOTI MobiControl போன்ற ஆப்ஸ்கள் நிறுவன தேவைக்கு ஏற்ப முன்பே நிறுவப்படும்.