GTA 6 நவ.19, 2026 அன்று வெளியாகிறது. பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X/S ஆகிய தளங்களில் இது வெளியிடப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் நவம்பர் 19 நள்ளிரவு பிறக்கும்போது கேம் அணுகலுக்கு வரும். ஏற்கனவே முன்பதிவு (Pre-order) செய்தவர்களுக்கான டிஜிட்டல் ப்ரீ-லோடிங் வசதி நவம்பர் 10-ம் தேதியே தொடங்கிவிட்டது.
இந்தியாவில் GTA 6 இரு பதிப்புகளில் (Editions) கிடைக்கிறது.
ஸ்டாண்டர்ட் எடிஷன் (Standard Edition) – ரூ. 5,999: இதில் அடிப்படை கேம் (Base game) மட்டுமே இருக்கும். இதை வாங்குபவர்கள், கேம் கோடைப் பயன்படுத்திய பிறகு பிளேஸ்டேஷன் அல்லது மைக்ரோசாப்ட் ஸ்டோர் மூலம் தனியாக 'அல்டிமேட் எடிஷன் அப்கிரேட்' (Ultimate Edition Upgrade) வாங்கிக்கொள்ளலாம்.
அல்டிமேட் எடிஷன் (Ultimate Edition) – ரூ. 7,499: இதில் அடிப்படை கேமுடன் சேர்த்து சிறப்பு வாகனங்கள், ஆயுதங்கள், ஆடைகள் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
முக்கிய போனஸ் அம்சங்கள்: '95 Grotti Cheetah, Hawk & Little Morgan Revolvers, தனிப்பயனாக்கப்பட்ட ஆயுத வகைகள், Vice City Styles, Jason's Safehouse Vehicles, Ganado Retro Build, Rideout Customs Mod Shop, Sara's Unisex Salon, Shitzu Squalo, Stock 305 Clothing Store, '67 Vapid Dominator Buggy & Garage, Electric Fang Tattoo Parlor, One-Eyed Willie's Mod Shop, Goodtime Gear, PTT Youngin$ Compound மற்றும் Classic Car Collection ஆகியவை இதில் அடங்கும்.