நெட்பிளிக்ஸ் இலவசம்.. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா பயனர்களுக்கு குட் நியூஸ்!

First Published | Aug 24, 2024, 1:32 PM IST

நெட்ஃபிளிக்ஸ் இலவச சந்தாவுடன் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகியவற்றின் புதிய திட்டங்களைப் பற்றி அறியவும். 199 ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தாவைப் பெறுங்கள் மற்றும் பல்வேறு தினசரி டேட்டா மற்றும் வேலிடிட்டி விருப்பங்களை ஆராயுங்கள்.

Free Netflix

ஓடிடி உடன் கூடிய திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால் உங்களுக்கான செய்திதான் இது. இதில் உங்களுக்கு நெட்பிளிக்ஸ் (Netflix) இன் இலவச சந்தா வழங்கப்படுகிறது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம். இந்த திட்டம் எப்போதும் டிரெண்டில் இருப்பதற்கு இதுவே காரணம். நீங்கள் இதேபோன்ற திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் புதிய திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

Netflix Plan

நீங்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்கினால், அதற்கு நீங்கள் 199 ரூபாய் செலவழிக்க வேண்டும். நெட்பிளிக்ஸ்-ல் ஒற்றைத் திரையில் 720p HD வீடியோவைப் பார்க்க, நீங்கள் ரூ.199 திட்டத்தை வாங்க வேண்டும். ஜியோ 1299 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். 

Tap to resize

Jio

இதில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்புடன் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், 5ஜி டேட்டா கிடைக்கும். ஜியோ 1799 திட்டத்தை வாங்கினால், தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும். அதாவது 84 நாட்களுக்குள் மொத்தம் 252 ஜிபி டேட்டாவைப் பெறப் போகிறீர்கள்.

Vi

வோடஃபோனின் 1198 திட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 70 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் மொத்தம் 140 ஜிபி டேட்டா கிடைக்கும். இதில், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் தினசரி வழங்கப்படுகிறது.

Airtel


1599 திட்டத்தில், தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது, மேலும் இது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் மொத்தம் 210 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஏர்டெல்  இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை பார்க்கலாம். 1798 த திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது. இதில் தினமும் 3 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ்கள் தினமும் வழங்கப்படுகிறது.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!