Published : Aug 22, 2024, 07:19 PM ISTUpdated : Aug 22, 2024, 07:34 PM IST
விரைவில் ஆப்பிள் ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் வெளியாக உள்ள நிலையில், ஐபோன் 15 (iPhone 15) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் (Flipkart) மிகப் பெரிய தள்ளுபடி கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
26
Flipkart iPhone 15 Price
ஐபோன் 16 மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 மொபைல்கள் ஆகஸ்ட் 26 வரை குறிப்பிடத்தக்க சலுகையுடன் கிடைக்கிறது.
36
iPhone 15 discount
ஐபோன் 15 இன் 128ஜிபி மாடல் பிளிப்கார்ட்டில் ரூ.64,999க்கு கிடைக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விலை ரூ.79,600 ஆக உள்ளது. இதன் மூலம் ரூ.14,601 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இதில் நிபந்தனைகள் எதுவும் இல்லை.
46
iPhone 15 price cut
இந்த பிளாட் தள்ளுபடியுடன், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. மொபைலின் செயல்பாடு மற்றும் தற்போதைய நிலையைப் பொறுத்து விலையில் ரூ.42,100 வரை குறையும். உண்மையான எக்ஸ்சேஜ் மதிப்பு விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச தொகையைவிட குறைவாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
56
iPhone 15 vs iPhone 16
ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தள்ளுபடியாக உள்ளது. ஆனால், இத்துடன் கூடுதலாக வங்கிச் சலுகைகள் எதையும் பிளிப்கார்ட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐபோன் 15 வாங்க விரும்புவோர் உடனடியாக ஆர்டர் செய்யலாம். தள்ளுபடி முடிவடைவதற்கு இந்த வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
66
iPhone 16 launch
வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸைப் பொறுத்தவரை, சில முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பெரிய பேட்டரி, புதிய சிப்செட் மற்றும் நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாடல்களில் விலையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பட்ஜெட் பிரச்சினை இல்லாதவர்கள் ஐபோன் 16 வெளியீட்டுக்குக் காத்திருக்கலாம்.