1,2 இல்ல... 3 டிஸ்பிளே... மூணு விதமா மடிக்கலாம்!! ஹைப் கிளப்பும் ஹவாய் Tri-Fold மொபைல்!

First Published | Aug 18, 2024, 6:23 PM IST

விரைவில் வரவிருக்கும் ஹவாய் (Huawei) நிறுவனத்தின் டிரிபிள்-ஃபோல்டிங் ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Huawei tri-fold smartphone

விரைவில் வரவிருக்கும் ஹவாய் (Huawei) நிறுவனத்தின் டிரிபிள்-ஃபோல்டிங் ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத வித்தியாசமான வடிவமைப்புக்கு கொண்ட இந்த மடிப்பு மொபைல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

Huawei tri-fold smartphone

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படத்தில், ஹவாய் நிறுவனத்தின் சிஇஓ மொபைலை பயன்படுத்தும் காட்சி உள்ளது. மொபைலின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை படத்தில் தெரிகின்றன. முன்னதாக, இதே மொபைல் CBG சிஇஓ ரிச்சர்ட் யூ கைகளில் இருப்பது போன்ற படங்கள் கசிந்தன.


Huawei tri-fold smartphone

இந்த மொபைலில் மடிக்கக்கூடிய 10-இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பருக்கு முன் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த மொபைலின் கேமரா அமைப்பு Huawei Mate X5 மொபைலை ஒத்திருக்கிறது.

Huawei tri-fold smartphone

ஹவாய் நிறுவனத்தின் புதிய சிலிக்கான்-கார்பன் பேட்டரி தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோனுக்கு அதிக ஆற்றல் ஆற்றல் கொண்ட பேட்டரி இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஆனால் சார்ஜிங் வேகம் குறைவாகவே இருப்பது ஒரு குறையாக உள்ளது.

Huawei tri-fold smartphone

இந்த புதுமையான ஸ்மார்ட்போன் ஒரே கீல் கொண்ட மடிப்பு மொபைல்களில் இருந்து மாறுபட்டது. சாம்சங் நிறுவனம் முன்பே ட்ரிபிள் ஃபோல்டு டிஸ்ப்ளே கான்செப்ட்டை வெளியிட்டிருக்கிறது. ஆனால், ஹவாய் நிறுவனம் தான் இந்த சிக்கலான வடிவமைப்பில் முதல் ஸ்மார்ட்போன் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!