iPhone 16
ஐபோன் 16 சீரிஸ் மொபைல்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், புகைப்படங்கள் திடீரென கசிந்திருப்பது சலசலப்பை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் ஆப்பிள் 16 சீரிஸ் மொபைல்களில் என்ன ஸ்பெஷல் அம்சங்கள் இருக்கும் என்று கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
Reddit சமூக வலைத்தளத்தில் Kaxeno (u/kaxeno5) என்ற பயனரால் ஐபோன் 16 மொபைல்களின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. ஐபோன் 16 கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு கலர் வேரியண்ட்களில் கிடைக்கும் என்று படத்தின் மூலம் ஊகிக்க முடிகிறது.
ஐபோன் 16 மொபைலின் பின்புற பேனலின் வடிவமைப்பு சில சுவாரஸ்யமான மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கேமரா ஓரத்தில் இரண்டு கேமராக்கள் ஒன்றின் கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 15 வடிவமைப்பில் இருந்து மாறுபட்டது.
இந்த மாத்திரை வடிவிலான கேமரா அமைப்பு ஐபோன் எக்ஸ் மொபைலை நினைவூட்டுகிறது. ஐபோன் புதிய சீரிஸில் ப்ரோ மாடல்களுக்கு பிரத்யேகமான புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
மொபைலில் ஃபிளாஷ் லைட்டின் இடமாற்றமும் மற்றொரு குறிப்பிட்டத்தக்க மாற்றம் ஆகும். ஐபோன் 16 இல், ஃபிளாஷ் பிரதான கேமராவில் இருந்து பின்புற பேனலின் வலது பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள ஐபோன் 16 படங்களில் கருப்பு மற்றும் வெள்ளை நிற வேரியண்ட்கள் மட்டுமே இருந்தாலும், நீலம், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களும் இருக்கும் என்று தகவல் பரவியுள்ளது. ஆப்பிள் இந்த ஆண்டு அதிக கலர் வேரியண்ட்களை கொண்டுவரப்படும் என்று பேசப்படுகிறது.
ஆப்பிள் பிரியர்கள் பலர் ஐபோன் 16 சீரிஸ் மொபைலின் லீக் செய்யப்பட்ட படங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு பிறகுதான் முழுவிவரம் தெரியும் என்பதால் அதற்காகக் காத்திருப்பாகவும் கூறுகின்றனர்.