கூகுள் சக மொபை நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய கேஜெட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 'மேட் பை கூகுள்' நிகழ்வுக்காக தொழில்நுட்ப உலகம் காத்திருக்கிறது. Google Pixel 9 series-ன் நான்கு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளன.
Google Pixel 9
Google Pixel 9 ஆனது 6.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது. இந்த மொபைல் நான்கு வண்ணங்களில் வரும். ஃபோனில் அதன் முன்னோடி நவீன கேமரா அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த போன் புதிய டென்சர் ஜி4 சிப் மற்றும் 12ஜிபி வரை ரேம் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலை அமெரிக்க சந்தையில் 50,000 ரூபாயில் இருந்து தொடங்கும் என தெரிகிறது.
Pixel 9 Pro & Pixel 9 Pro XL
இந்த மாடல் டென்சர் ஜி4 SoC சிப் மற்றும் 16 ஜிபி ரேம் உடன் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Pro மாடலுக்கு 4,558 mAh பேட்டரியையும், Pro XLக்கு 4,942 mAh பேட்டரியையும் எதிர்பார்க்கலாம். பிக்சல் 9 ப்ரோவின் 128ஜிபி வேரியன்ட் விலை ரூ.1 லட்சம் என்று ஐரோப்பிய மார்க்கெட் கூறுகிறது. இது தவிர, பிக்சல் 9 ப்ரோ 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சம் மீத பயனர்களையும் தன்பக்கம் ஈர்க்கும் BSNL! வெறும் ரூ.91 ரீச்சார்ஜின் 60 நாள் வேலிடிட்டி!
Pixel 9 Pro Fold
6.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டதாக எதிர்பார்க்கப்படும் Pixel 9 Pro Fold 9 இன்ச் இன்னர் டிஸ்ப்ளேயுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Pixel 9 Pro Fold மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 48MP பிரதான கேமரா, 10.5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முகப்பில் 10 MP செல்ஃபி கேமராவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆத்தி..! 10 ஆயிரம் வரை தள்ளுபடியா.. ஐக்யூ மொபைல் ஆஃபர்.. அமேசான் சேலில் குவியும் ஆர்டர்கள்..