ரிலையன்சின் ஜியோ (jio), பாரதி ஏர்டெல் (airtel) மற்றும் வோடபோன் ஐடியா (vi) ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் அண்மையில் 25% சதவீதம் வரை ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்தன. குறைந்தபட்சம் 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பயனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி ரீசார்ஜ் செய்தாலும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டியாக கொடுக்கப்படுகிறது.