முகேஷ் அம்பானி பயன்படுத்தும் ஆடம்பரமான செல்போன்! என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

Published : Aug 04, 2024, 09:55 PM IST

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வைத்திருக்கும் மொபைல் போன் எது என்று தெரியுமா?

PREV
15
முகேஷ் அம்பானி பயன்படுத்தும் ஆடம்பரமான செல்போன்! என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
Mukesh Ambani

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வைத்திருக்கும் மொபைல் போன் எது என்று தெரியுமா? அந்த விலை உயர்ந்த செல்போன் ப்ரீமியம் தோற்றத்துடன் பல அதிநவீன தொழில்நுட்பத் திறன்களையும் உள்ளடக்கியது.

25
Ambani family

சமீபத்தில் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினார் முகேஷ் அம்பானி. திருமண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட படங்களில் இருந்து அவர் எந்த போனை பயன்படுத்துகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

35
Ambani using iPhone

முகேஷ் அம்பானியின் எப்போதும் பயன்படுத்தும் மொபைல் iPhone 15 Pro Max தான். ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன வசதிகள் கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் இது. ஐபோன் 15 சீரிஸில் மிகவும் விலையுயர்ந்த மாடல். 1 TB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ. 2 லட்சம். 256 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.1.50 லட்சம்.

45

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. மொபைலின் பின்புறத்தில் 48MP, 12MP, மற்றும் 12MP சென்சார்கள் கொண்ட சக்திவாய்ந்த கேமரா அமைப்பு உள்ளது. 12MP செல்ஃபி கேமராவும் உள்ளது. கிரேடு-5 டைட்டானியத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செல்போன் உறுதியானது மட்டுமல்ல, வாட்டர் ப்ரூப் அம்சமும் கொண்டது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு நீடித்து உழைப்பதை உறுதி செய்கிறது.

55

அம்பானி குடும்பத்தில் முகேஷ் அம்பானி மட்டும் இந்த சொகுசு மொபைலை வைத்திருக்கவில்லை. அவரது மனைவி நீதா அம்பானியும் இதே மொபைல் போனை தான் பயன்படுத்துகிறார். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories