20 ஆயிரம் பட்ஜெட்டில் செம ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதைப் பார்த்துட்டு செலக்ட் பண்ணுங்க!

First Published | Jun 22, 2024, 4:30 PM IST

ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டுக்குள் 5G வசதியுடன் பக்காவான ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறவர்களுக்கு பல சாய்ஸ் இருக்கிறது. இந்த விலைப் பிரிவில் ஓன்பிளஸ், சாம்சங், ஓப்போ, ரெட்மீ, ரியல்மீ என பல பிராண்டுகள் போட்டி போட்டு மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளன. அவற்றில் சிறந்தவை எவை என்று பார்க்கலாம்.

OnePlus Nord CE 3 5G

6.7 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13.1, ஸ்னாப்டிராகன் 782G சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB மற்றும் 12 GB + 256 GB வேரியண்ட்களில் கிடைக்கிறது.  50MP கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 16MP செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 5000mAh பேட்டரி இருக்கிறது.

iQOO Z9 5G

6.67 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் Dimensity 7200 சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB மற்றும் 12 GB + 256 GB வேரியண்ட்களில் கிடைக்கிறது. 8GB RAM கொண்ட இந்த மொபைல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்களுடன் கிடைக்கிறது. பின்புறம் 50MP சோனி IMX882 OIS முதன்மை கேமராவும் 2 MP பொக்கே கேமராவும் உள்ளது. 16MP செல்ஃபி கேமரா. 44W சார்ஜிங் திறனுடன் 5,000mAh பேட்டரி இருக்கிறது.

Tap to resize

Redmi Note 12 5G

6.74-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 13.1, மீடியாடெக் பிராசஸர்கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 GB + 128 GB மற்றும் 12 GB + 256 GB வேரியண்ட்களில் கிடைக்கிறது.  50MP கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 16MP செல்ஃபி கேமராவும் இருக்கிறது. 5000mAh பேட்டரி இருக்கிறது.

OnePlus Nord CE 3 Lite 5G

6.72 இன்ச் முழு ஹெச்.டி. பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13.1 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ், ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆகியவற்றுடன் 8 GB RAM மற்றும் 256 GB மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 108MP + 2MP + 2MP கேமரா தொகுப்பு உள்ளது. 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 5000mAh பேட்டரி இருக்கிறது.

realme NARZO 70 5G

6.67 இன்ச் முழு ஹெச்.டி. பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான realme UI 5.0, மீடியாடெக் சிப்செட், ஆகியவற்றுடன் 8 GB RAM மற்றும் 128 GB மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 50MP + 2MP கேமரா தொகுப்பு உள்ளது. 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 45W SUPERVOOC சார்ஜிங் திறனுடன் 5000mAh பேட்டரி இருக்கிறது.

Samsung Galaxy M34 5G

6.6 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு v12.0 ஓ.எஸ், சாம்சங்கின் Exynos 1280 ஆக்டா கோர் சிப்செட் ஆகியவற்றுடன் 8 GB RAM மற்றும் 128 GB மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. 50MP + 5MP + 2MP + 2MP பின்புற கேமரா தொகுப்பு உள்ளது. 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரி இருக்கிறது.

realme 12+ 5G

6.78-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஃபன்டச் ஓ.எஸ். 13, மீடியாடெக் சிப்செட் ஆகியவற்றைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 256 GB மெமரியுடன் 8 GB மற்றும் 6GB RAM வேரியண்ட்களில் கிடைக்கிறது. 50MP + 5MP + 2MP பின்புற கேமரா தொகுப்பும் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரி இருக்கிறது.

Oppo A79 5G

6.72-இன்ச் டிஸ்ப்ளே, கலர் ஓ.எஸ்.13.1, மீடியாடெக் சிப்செட் ஆகியவற்றுடன் 8 GB RAM மற்றும் 128 GB மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. 50MP + 2MP பின்புற கேமரா தொகுப்பு உள்ளது. 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரி இருக்கிறது.

Vivo Y28 5G

6.58 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஃபன்டச் ஓ.எஸ். 13 கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 128 GB மெமரி கொண்டது. 4GB, 6GB, 8GB RAM வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் 50MP + 2MP பின்புற கேமரா தொகுப்பும், 8MP முன்பக்க கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரியும் இருக்கிறது.

Latest Videos

click me!