புது பிராண்டை களமிறக்கும் நத்திங்! முதல் CMF ஸ்டார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

First Published | May 21, 2024, 4:19 PM IST

லண்டனை தளமாகக் கொண்ட நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் சி.எம்.எஃப். (CMF) CMF ஃபோன் 1 மொபைலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

CMF Phone 1 by Nothing

லண்டனை தளமாகக் கொண்ட நத்திங் நிறுவனம் நத்திங் 2a ஸ்மார்ட்போனை மார்ச் 2024 இல் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, அதன் துணை பிராண்ட் சி.எம்.எஃப். (CMF) CMF ஃபோன் 1 மொபைலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ட்விட்டரில் MlgmXyysd என்ற பயனர் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நத்திங் 2a ஸ்மார்ட்போனைப் போல CMF ஃபோன் 1 மொபைலும் மீடியாடெக் Dimensity 7200 சிப்செட்டுடன் அறிமுகமாகும். CMF ஃபோன் (1) பற்றி டிப்ஸ்டர் கசிந்ததை இங்கே காணலாம்.

CMF Phone 1 launch date

சி.எம்.எஃப். ஃபோன் 1 6.67-இன்ச் OLED டிஸ்பிளே கொண்டிருக்கும். மாற்றக்கூடிய பிளாஸ்டிக் பேக் கவர் இருக்கும். பின்புறத்தில் க்ளிஃப் லைட் எதுவும் இருக்காது. 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 2.6 CMF போன் 1 மொபைலிலும் இருக்கலாம். மூன்று வருட OS அப்டேட் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட் உத்தரவாதம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Tap to resize

CMF Phone 1 price in India

CMF ஃபோன் (1) 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டதாக இருக்கும். 50MP பிரைமரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்அப், 16MP செல்ஃபி ஷூட்டர் இருக்கலாம். Wi-Fi 6, புளூடூத் 5.3 மற்றும் USB Type-C போர்ட் ஆகியயும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

CMF ஸ்மார்ட்ஃபோனின் ஜூலை 2024 இல் விற்பனைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 20,800 ரூபாய் ஆரம்ப விலையில் கிடைக்கக்கூடும். கருப்பு, பச்சை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வெளியாகலாம். ஆனால் இந்தத் தகவல்களை CMF நிறுவன்ம உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!